ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடக்க தடையில்லை! ஓபிஸ் இன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குத் தடை..!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஈபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடக்க தடையில்லை! ஓபிஸ் இன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குத் தடை..!

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக ஈபிஎஸ் தரப்பில் 23 தீர்மானங்களின் மட்டுமே நிறைவேற்ற முடியும் என வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதிமுகவில் முக்கியமான விசாரணை:  

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பொதுக்குழு நடந்த போது அதில், 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தடை மீறப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதா ஈபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டது.

இரண்டு வழக்குகளை எதிர்கொள்ளும் ஈபிஎஸ்:

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களில் ஈபிஎஸ்க்கு எதிரான வழக்குகள் உள்ளன. நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை ஈபிஎஸ் தரப்பு நாடினால் தங்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் விசாரணையில் உள்ளன. இதன் மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.  இந்த விசாரணையின் போது, ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்.

ஓபிஎஸ் ஒத்துழைப்புதரவில்லை


ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இருந்த சூழலில் ஓபிஎஸ் தற்போது பொருளாளராக மட்டுமே உள்ளார். அந்த சூழலில், கட்சியின் பொறுப்பை உணர்ந்து ஓபிஎஸ் செயல்படவில்லை. எனவும் ஈபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. கட்சியின் வரவு செலவு கணக்குகளை சரியாக கையாளவில்லை எனவும், ஓபிஎஸ் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் உள்ளார் எனவும் ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. பொருளாளர் கையெழுத்திடாததால் பணியாளர்களுக்கு ஊதியம் தர இயலவில்லை என்றும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களின் ஆதரவை ஓபிஎஸ் இழந்துவிட்டார் எனவும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

பொதுகுழுக் கூட்டம் நாங்கள் எப்படி தலையிட முடியும்? 

அதிமுக பொதுக்குழவை நடத்துவது தொடர்பாக நாங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ் தரப்பு கட்சி விதிகளில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம் எனக் கூறியது. பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் தலையிட முடியாது நீதிபதிகள் கூறினர். அதே போல, உயர்நீதிமன்றத்தின் சில குறிப்பிட்ட அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 23 ஆம்தேதியே பொதுக்குழுக் கூட்டம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது முறையீடு ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  

ஜுலை 11ல் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: 


இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவை நடத்த எந்த விதமான தடையும் உச்சநீதிமன்றத்தில் இருந்து வராது எனக் கூறியுள்ளது. நாங்கள் ஏன் தலையிட வேண்டும் என நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் இதற்கான இறுதி தீர்ப்பை விரைவில் தெரிவிக்க உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றம் முறையிட்டது. அதன் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.