மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..?

மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..?

கிஷோர் கே சுவாமி, பாப்ஜி மதன் வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார் ஆபாச நடிகை மீரா மிதுன். தன்னைவிட 15 வயது குறைவான கலர்க்கோழி குஞ்சுவை வளைத்துப்போட்ட இந்த நடிகை, எப்போதுமே கஞ்சா அடித்துக்கொண்டு, மதுபோதையில் காதலனை கொஞ்சிக்கொண்டும், தன்னை இந்தியாவிலேயே பேரழகி என்றும், முன்னணி நடிகைகள் பலரும் காப்பியடிப்பதாகவும், நடிகைகள் பலரும் அடஜஸ்ட்மென்ட் செய்து சினிமா பட வாய்ப்பு வாங்குவதாக உளறிக்கொண்டே இருப்பார்.

கடந்த சில மாதங்களாக ரொமான்ஸ் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடும் இந்த ஜோடிகள் சமீபத்தில் பட்டியலின மக்களை இழிவாக பேசி வசமாக சிக்கிக்கொண்டது.

கடந்த சில மாதங்களில் சமூகவலைத்தளங்களில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கிஷோர் கே சாமி மற்றும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடிய போது சிறுமிகள் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதன் என குண்டர் சட்டத்தில் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது பேமஸ் ஆவதற்காக அவர்களது லிஸ்டில் சிக்கியியுள்ளது இந்த இளம் ஜோடிகள்.

மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் ஆபாச நடிகை மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என்றும், தன்னுடைய ஸ்டைலை தான் மற்ற நடிகைகள் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்றும் கூறிக்கொண்டு வலம் வருபவர் தான் மீரா மிதுன்.

இதையே ஒரு சாக்காக வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் ஆபாச நடிகை தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன். இதற்கு முன்பாக பல பெண்களிடம் அழகி போட்டி நடத்துவதாக லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி, பின்னர் மாட்டிக் கொண்டு தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று டிமிக்கிக் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மீராமிதுன், இந்த ஆபாச பேச்சுகள் மூலம் பப்ளிசிட்டியும் தேடி வந்தார்.

ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை தரகுறைவான வார்த்தைகளால் ஆபாசமாக பேசினார். அதோடு விட்டாரா, முன்னணி நடிகைகளான ஐஸ்வர்யாராஜேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் தன்னை காப்பியடித்துதான் முன்னணி நடிகைகளாக உள்ளார்கள் என்றும் பிதற்றினார். ஆனால் இவரின் பப்ளிசிட்டி தேடலை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

அடுத்ததாக எப்படி பப்ளிசிட்டி தேடுவது என்று ரூம் போட்டு யோசித்த மீரா மிதுன்,  தன்னைவிட 15 வயது குறைவான காதலருடன் சேர்ந்து பட்டியலின சாதி குறித்து தரக்குறைவாக விமர்சித்தார். 

பட்டியலின இயக்குநர்கள் தன்னைப்போல இருப்பவர்களை தேடிப்பிடித்து நாயகியாக்குவதும், அவர்களே தன்னை ஒதுக்குவதாகவும் கூறினார். அதோடுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்களை வெளியேற்ற வேண்டும் என பேசியிருந்தார். 

இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.  மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மீரா மிதுன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டது. 

இப்படி சம்மனுக்கு ஆஜராகாத மீரா மிதுன், வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது இந்த வீடியோவை கேரளாவில் தலைமறைவாக இருந்துக் கொண்டு வெளியிட்டார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஐ.பி. அட்ரஸ் மற்றும் போன் சிக்னலை வைத்து போலீசார் மீரா மிதுனை நெருங்கினர். போலீசாரை பார்த்து மிரண்டுபோன மீராமிதுன், தன்னை துன்புறுத்துவதாக கத்தி கூச்சலிட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் போலீசார் தம்மை டார்ச்சர் செய்கின்றனர்; இங்கிருந்து அவர்களை போக சொல்லுங்கள் என அழுது கதறியபடி வீடியோ வெளியிட்டார். இருந்தபோதும் ஒருவழியாக கடந்த 14-ந் தேதி மீரா மிதுனை போலீசார் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

கேரளாவில் இருந்து சென்னை வரும் வரையிலும் போலீசாரை மிக கேவலமாக ஒருமையில் விமர்சித்து வந்தாராம் மீரா மிதுன். ஆனாலும் போலீசார் அமைதியாக இருந்தபடியே சென்னை வேப்பேரி காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். 

அவர் அத்துடன் நிற்கவில்லையாம். கேரளாவில் இருந்து சென்னை வரும் வழி நெடுகிலும் போலீசாரை ஒருமையில் பேசி, திட்டிக் கொண்டே வந்தாராம். மேலும் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தபோது, போலீசார் என் கையை உடைக்கப் பார்த்தாங்க, சாப்பாடு தரல, கொடுமைப்படுத்துறாங்க என்று கத்திக் கொண்டே சென்றார்.விசாரணை நடந்த தளத்தில் மீரா மிதுன் கூச்சலிடும் சத்தமாக இருந்தது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லையாம். 

என்னுடைய வழக்குரைஞர் வரும் வரையில் நான் எதையும் பேசப் போவதில்லை" என விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளார். கூடவே, தன்னுடைய கையை உடைப்பதற்கு போலீஸார் முயற்சி செய்வதாகவும் சத்தம் போட்டுள்ளார். அவரை எதிர்கொள்ள முடியாமல் காவலர்கள் திணறியுள்ளனர். 


இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தினார்கள். அவரை ஆகஸ்ட் 27ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீராவை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மீரா மிதுனை கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைப்பதற்குள் போலீசார் படாதபாடு பட்டுவிட்டார்களாம். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மீரா மிதுன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.