சசிகலா மேட்டரில் பஞ்சாயத்து பன்ன அமித்ஷா..! நொறுங்கிப் போன எடப்பாடி..! அதிர்ச்சியில் சீனியர்கள்

இரட்டை இலையில் ஒரு இலை ஓகே..!ஒரு இலை இழுத்தடிப்பு..!

சசிகலா மேட்டரில் பஞ்சாயத்து பன்ன அமித்ஷா..! நொறுங்கிப் போன எடப்பாடி..! அதிர்ச்சியில் சீனியர்கள்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நெறுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான பணிகளில் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால், அங்கிருக்கும் அதிருப்தியாளர்களையும், பிற கட்சியினரையும் தன் பக்கம் இழுத்து உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது திமுக. 

உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றியை பெற்று மனதை ஆற்றிக் கொள்ள மும்முரமாக உள்ளது அதிமுக. அதிமுகவை பலப்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் தனது பலத்தையும் காட்ட முயற்சித்து வருகிறது பாஜக. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம் என கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளே கட்டமாக கூறி வருகின்றனர். இருப்பினும் கட்சி தலைமை உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என கூறியுள்ளது. வேறு என்ன செய்ய முடியும்? இது ஒரு புறம் இருக்க சசிகலா வேறு தன் பங்கிற்கு அதிமுக நிர்வாகிகளிடம் பேசி மனதை கலைத்து வருகிறார். மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழலை வெளி கொண்டு வந்தே தீருவேன் என கங்கனம் கட்டி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன்பு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. 

உள்ளாட்சி தேர்தல் ஒரு பக்கம் என்றால் நாடாளுமன்ற தேர்தல் மற்றொரு பக்கம் கட்சிகளை நெறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். 

ஏற்கனவே எடப்பாடிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே தலைவர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட மனக்கசப்பு தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், இருவரும் தனித்தனியே டெல்லி சென்றனர்.  ஜூலை 25-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல, அவரை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று, இணை ஒருங்கிணைப்பாளர் அன்று இரவே டெல்லிக்கு சென்றார். 26-ம் தேதி இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குள், இருவரையும் தனித் தனியே ஆலோசனையும் நடத்தினார் பிரதமர் மோடி. 

அதிமுக ஒற்றுமையாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்.. வரும் நாடாளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியமான ஒன்று என மோடி இருவரிடமும் கூறியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதனை தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இருவரும் சந்தித்து பேசினர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித் ஷா சென்னைக்கு வந்தபோது அவரை சந்தித்த ஓபிஎஸ், சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக் கொண்டால் தேர்தல் வெற்றிக்கு ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் என் தொகுதியிலேயே எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான் என்று எடுத்துரைத்தார். ஆனால் எடப்பாடி அப்போது இரட்டை இலைக்குதான் தமிழகத்தில் மதிப்பு, எனவே சசிகலாவால் எதுவும் ஆகப்போவதில்லை என்று அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அதனை தற்போது நினைவுபடுத்திய அமித்ஷா,  அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி 2024 தேர்தலில் தமிழ்நாட்டுக்குத் தேவை எனவும், மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணியை நாம் பலப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்த்து ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்ல அமித்ஷா கூற, ஆரம்பத்தில் இருந்தே சசிகலா விஷயத்தில் வாய் திறக்காத ஓ.பி.எஸ் இதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம். ஆனால் எடப்பாடிக்கு தான் இதில் உடன்பாடு எட்டவில்லை. சிறிது காலம் அவகாசம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம் இ.பி.எஸ்.

டெல்லி பயணம் முடிந்து மதுரை திரும்பிய ஓ.பி.எஸ், “அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயார்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவை மீட்போம் என்ற தினகரனின் பேச்சு பற்றி அவர் பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டார். கடந்த ஜனவரி மாதம் முதல்வராக இருந்தபோது டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்த எடப்பாடி அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சசிகலா அதிமுக உறுப்பினராக இல்லை. அவரை சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று முழங்கினார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக செல்லும்போது சசிகலா பற்றிய கேள்வியை முடிக்கும் முன்பே பிரஸ்மீட்டை முடித்துவிட்டார். ஆக எடப்பாடி மீண்டும் சசிகலாவின் வருகையை ஏற்பாரா? என்பது மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது. 

பின்ன கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினோம்..! சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்து சசிகலாவை லெப்ட் ரைட் வாங்கியதும், அவரை நிச்சயம் கட்சியில் சேர்க்க மாட்டோம் எனக் கூறியதும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் இயற்ற தனியாக ஆணை பிறப்பித்ததும், கண் முன்னே வந்து செல்லும் அல்லவா? மீண்டும் சசிகலா கட்சிக்குள் வந்து விட்டால், ஜெயலலிதா இருந்த போது எப்படி கப் சிப் என்று அடங்கி இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோமே? என பயத்துடனும், அதிர்ச்சியுடனும், கவலையுடனும், குழப்பத்துடனும் காணப்படுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.