திமுக அரசின் மீதான குற்றங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் புள்ளிவிவரமாக சொன்ன அண்ணாமலை , பல குற்றச்சாட்டை குழி தோண்டி எடுக்கிறாரா?

கோவை அவினாசி சாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாட்டின் பாஜகவின் தலைவர் அண்ணாமலை திமுகவின் மீதான குற்றங்களை ஒவ்வென்றாக அடுக்கியிருக்கிறார்.

திமுக அரசின் மீதான குற்றங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் புள்ளிவிவரமாக சொன்ன அண்ணாமலை , பல குற்றச்சாட்டை குழி தோண்டி எடுக்கிறாரா?

விவசாயிகளுக்கு பாஜக துணை 

அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு  தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1630 ஏக்கர் தனியார்  நிலத்தை மட்டும் எடுக்க இருப்பதாக அரசு சொல்கிறது. மொத்தமுள்ள 3000 ஏக்கரில் 1630 ஏக்கர் போக மீதமுள்ள விவசாய நிலத்தை தான் எடுக்க இருப்பதாக அரசின் செய்தி குறிப்பில் தெளிவாக இருக்கிறது.

விவசாயகளின் பிரச்சனைக்கு எப்போதும் பாஜக துணை நிற்கும்

3000 ஏக்கரில் விவாசயம் நிலம்  இருந்தாலும் அரசின் அரசாணை இருப்பதால் விவசாயிகள் தாங்கள் நிலத்தைக் வைத்து எந்த வங்கியின் மூலம் கடன் கூட பெற முடியாது.எம்.பி.ராசா அவர்கள் மந்திரியாக இருந்தார என்பதில் சந்தேகமாக உள்ளது.அன்னூர் தொழிற்பேட்டை விவாகரம் குறித்து பச்சை பொய் பேசி விவசாயிகளை திசை திருப்ப பார்க்கிறது திராவிட மாடல் அரசு ..

கோவை கிணத்துகடவில் கனிம வள கொள்ளை அதிகமாக நடக்கிறது.அது குறித்த போராட்டத்திலும் பாஜக தனது ஆதாரவை தெரிவிக்கும்.

திமுகவை பற்றி அடுத்த முறை விரிவாக சொல்கிறேன்

இன்றைக்கு வெண்ணெய் விலையேற்ற பட்டியல் வெளிவந்தது அதற்கெல்லாமே காரணம் இருக்கு அமுலின் நெய் விலையை விட ஆவினின் நெய் விலை அதிகம்.திமுகவில் சம்பந்தம் செய்துள்ள நபர் பால் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளார்.அது பற்றி அடுத்த செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறேன்..ஆவினின் விலையை ஏற்றி தனியார் பால்  நிறுவனத்திற்க்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது.

ரபேல் விமான கை கடிகாரம் 

நான் கட்டியிருக்கின்ற கை கடிகாரம் .ரபேல் விமானத்தின் உதிரிபாகங்கள் மூலம் செய்த கை கடிகாரம்.மொத்தம் தயாரித்த 500  கைகடிகாரத்தில் இது 139 வது கை கடிகாரம்.என்னால் அந்த விமானத்தை ஓட்ட முடியவில்லை அந்த பாக்கியமில்லை எனவே நமது தேசிய உணர்வோடு இந்த கைகடிகாரத்தைக் கட்டுகிறேன்.எனவே இந்த கை கடிகாரத்தை வைத்து சமூக வலைதளம் மூலம் விமர்சனம் செய்கிறார்கள்...

சமூக வலைதளம் மூலம் விமர்சனம்

முன்னெப்பலாமே ஏதாவது ஒருவகையில் உருவகேலிகளும் பேச்சின் மூலமாக கேலி செய்யப்படும் இப்போது ஆடை, அலங்காரங்கள் குறித்தும் விமர்சனம் செய்ய துவங்கி விட்டார்கள்.

தண்ணீருக்காக மட்டுமே 

தொழிற்பேட்டை அன்னூரில் அமைப்பது என்பது எல்லாம்,வளர்ச்சிக்காக அல்ல .இங்குள்ள தண்ணீருக்காக.கோவை கார் குண்டு வெடி விபத்து சம்பந்தமான விசாரணை திருப்திகரமாக உள்ளது..உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பின்னர் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் புகழுவதை படித்து காட்டிய  அண்ணாமலைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை விட உதயநிதிக்கு Information broadcasting minister என்ற துறையை ஒதுக்கலாம்..எனால் சினிமா துறையை அவர்கள் கையில் தான் உள்ளது.

அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் பாஜகவில் இணைந்து விட்டார என்று. தெரியவில்லை.. எனவே கட்சியின்  இரண்டாம் கட்ட தலைவர்கள் ,மூன்றாம் தரப்பினர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை......எந்த தயாரிப்பாளரும் தமிழகத்தில் பிழைக்க வாய்பில்லை..இருக்கின்ற பவரை வைத்து சினிமாவை எவ்வளவு நாள் வைத்துக்கிறீர்கள் என்றுபார்ப்போம்.இதை மத்திய அரசும்  கண்காணித்து கொண்டிருக்கிறது...


அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடாது..

பாஜகவில் சீனியர்- ஜீனியர் என்றில்லை.
அனைவருக்கும் கட்சியை வழிநடத்துவதே தான் எண்ணம்..திமுகவுக்கு எதிரியே நாங்கள் தான்..அதனால் எங்களை வைத்து தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள்..

தனியார் தேயிலை தொழிற்சாலைகள் எல்லாம் லாபத்தில் இயங்கும் போது..
டான் டீ தேயிலை தொழிற்சாலை ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை சிந்திக்க வேண்டும்..இதை திறம்பட கண்கானிக்க வேண்டும்..
இன்று எல்லாம் டாஸ்மார்க் கடையிலும் ஸ்ப்ரிங்க் வாட்டர் பாட்டில் சப்ளை செய்கிறார்கள்..அது கோபாலபுரம் குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் நிறுவனம்..

அமைச்சர்கள் ஊழல் பட்டியல் குறித்து,லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தும் ஆளும் அரசின் அழுத்ததால்  எந்த பயனுமில்லை..எம்.பி.ராசா இன்னும் 2 ஜி ஊழலால் குற்றம்சாட்டப்பட்டவர்.