தவறுகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றனவா பாஜகவும் காங்கிரஸும்......

தவறுகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றனவா பாஜகவும் காங்கிரஸும்......
Published on
Updated on
2 min read

இந்திய தேசிய காங்கிரஸ் 54 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செஇது வருகிறது.  2014 பொது தேர்தலில் காங்கிரஸ் தோல்வுயடைந்ததை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸின் செல்வாகு சரிய தொடங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.  மாற்றத்தை விரும்பிய மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்தனர் என்றும் அவர்களது ஆட்சியில் மன நிறைவு அடைந்ததாலேயே 2019 தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெற்றதாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.  தோல்வி அடைந்த காங்கிரஸால் எதிர்கட்சியாக ஆட்சி அமைக்கும் இடங்களை கூட பெற முடியவில்லை.  மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகே எதிர்கட்சி நிலையை அடைந்தது காங்கிரஸ்.

2024 பொது தேர்தல்:

தற்போது இரு கட்சிகளும் 2024 பொது தேர்தலை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது தற்போது வெளியாகும் பல தகவல்களின் அடிப்படையில் அறிய முடிகிறது. 

காங்கிரஸ் கையிலெடுத்த ஆயுதம்:

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே எதிர்கட்சிகளீன் நடவடிக்கைகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டது.  விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தம், பண மதிப்பு வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி ஆகியவற்றை குறித்து கேள்வி எழுப்ப முயன்றதாகவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் காங்கிரசின் இது போன்ற செயல்பாடுகள் மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை குறைப்பதற்காகவும் மக்களுக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள் என மக்களை நம்ப செய்யும் முயற்சியே இது என பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  2024 பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காகவே இது போன்ற தவறான கருத்துகளை பரப்பி வருவதாகவும் பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும் அவர்கள் குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் உள்நாட்டு வருமானம் அதிகரித்து உள்ளதாகவும் பொருளாதார நிலை சீராக உள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

பாஜக பதிலடி:

காங்கிரஸ் எண்ணங்களை புரிந்து கொண்ட பாஜக அவர்கள் வாய்க்கு பூட்டு போடும் விதமாக நேஷனல் ஹெரால்டு வழக்கை கையிலெடுத்துள்ளது.  இது சரியான நேரத்தில் சரியான தாக்குதல் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.  பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி 2012ல் சோனியா மற்றும் ராகுல் மீது நேஷனல் ஹெரால்டு தொடர்பாக வழக்கு தொடுத்தார்.  தற்போது காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வழக்கை தூசிதட்டி கையிலெடுத்துள்ளது பாஜக.

நேஷனல் வழக்கை தொடர்ந்து மக்கள் கவனம் முழுவதும் வழக்கு பக்கமே திரும்பியுள்ளது.  பாஜக மீதான குற்றசாட்டுகளை மறைக்க அல்லது திசை திருப்பும் விதமான அதன் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் பேரணி:

காங்கிரஸ் அத்தியாவசிய பொருள்கள் மீதான வரி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து 5ம் தேதி பேரணி நடத்தியது.  இப்பேரணி நாடு தழுவிய போராட்டமாக மாறியது.  நாடு முழுவதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைநகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ராகுல் இந்தியாவில் ஜனநாயகம் இறந்து விட்டதாக கூறியிருந்தார்.  மேலும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக விமர்சித்திருந்தார் ராகுல் காந்தி.  பாஜக மக்கள் நலனை மறந்து சில பேருடைய நலனுக்காகவே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.  

இப்பேரணி நேஷனல் ஹெரால்டு விவகாரத்திலிருந்து மக்களை திசை திருப்பும் தந்திரமே என பாஜக சார்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கிலிருந்து சோனியாவும் ராகுலும் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வெற்றியே குறிக்கோள்:

காங்கிரசும் பாஜகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  இது போன்ற குற்றசாட்டுகளும்  விமர்சனங்களும் மக்கள் கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்க்கவும் அவர்கள் குற்றமற்றவர்கள் என காட்டுவதற்க்க மட்டுமே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  2024 பொது தேர்தல் மட்டுமே அவர்களின் ஒரே குறிக்கோள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்பதே உண்மை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com