நலத்துறைப் பள்ளிகளில் பொதுக்கலந்தாய்வா? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆதிதிராவிடர் நலத்துறை!

நலத்துறைப் பள்ளிகளில் பொதுக்கலந்தாய்வா? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆதிதிராவிடர் நலத்துறை!

நலத்துறைப் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதால் இதில்  பொதுக்கலந்தாய்வு முறை பின்பற்றப்படுமா? அல்லது நலத்துறை பள்ளிகளுக்குள்ளே கலந்தாய்வு நடைபெறுமா?  என கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சந்தேகத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை முற்றுப்புள்ளி வைத்தது.

தமிழ்நாட்டில் தொலைதூரத்திலும் பின்தங்கிய பகுதிகளிலிருந்தும் வரும் மாணவர்கள் பாகுபாட்டின் அடிப்படையில் அவர்களது பள்ளிக் கல்வி பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்துடன் நலத்துறை பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

இதில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், இந்து சமய அறநிலையதுறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளிட்ட பிரிவுகள் உண்டு. இப்பள்ளிகள் பள்ளிக் கல்விதுறையின் கீழ் அல்லாமல் சம்பந்தப்பட்ட நலத்துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் நாளடைவில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஊழல் அதிகரிப்பு, வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்குவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அவர்களை இப்படிப்பட் ஆசிரியர்களை பள்ளிக் கல்விதுறையினர் கேள்வி எழுப்ப முடியவில்லை. அதற்கு உரிய அதிகாரமும் இவர்களுக்கு இல்லை. இதன் காரணமாக நலத்துறை பள்ளிகளின் சேர்க்கை விகிதமும் கல்வி தரமும் நாளுக்கு நாள் வீழ்ந்து கொண்டிருந்தது. எந்த நோக்கத்திற்காக இந்த பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதாே அதற்கு எதிரான நடைமுறைக்கு இந்த பள்ளிகள் சென்றன. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக நலத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்க இருப்பதாக 2023-2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து நலத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்விதுறையுடன் இணைக்க எதிர்ப்பும் கிளம்பின. இந்த இணைப்பின் மூலம் ஆதிதிரவிடர் உள்ளிட்ட நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மடைமாற்றப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் வருவதால் ஆசிரியர் நியமனத்திற்கு பொது கலந்தாய்வு திட்டமே செயல்படுத்தப்படும்.  இதனால் பட்டியலினத்தோருக்கான வேலை வாய்புகள் குறையும். மேலும் பொது கலந்தாய்வின் வழியாக வேலைக்கு வரும் ஆசிரியரகள் மாணவர்களிடம் பாகுபாட்டுனம் நடந்து கொள்வர் என  இதனை எதிர்ப்பவர்களின் தரப்பு நியாயங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆதிதிராவிடர் நலத்துறைபள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் உள்ளிட்டோரின் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி வரும் ஆகஸ்ட் 4 ஆம் நாள் காலை 10 மணிக்கு இணைய வழியில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வானது ஆதிதிராவிடர் நலத்துறைக்குள்ளாக மட்டுமே நடைபெற உள்ளது. இவ்வறிப்பின் மூலம் பள்ளிக்கல்விதுறையுடன் இணைப்பதால் பொதுக்கலந்தாய்வுமுறை பின்பற்றப்பட்டு பட்டியலினத்தவரின் வாய்ப்புகள் குறையும் என்று  எழுந்து வந்த சந்தேகத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாட்டம்!