புரூஸ் லீயின் மரணத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்...மரணத்திற்கான காரணம் இதுதான்!!!

புரூஸ் லீயின் மரணத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்...மரணத்திற்கான காரணம் இதுதான்!!!

தற்காப்புக் கலைக்கு உலக அளவில் அங்கீகாரம் அளித்த ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ, 1973 ஜூலை 20-ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.  அவர் இறந்தபோது அவரது வயது 32 மட்டுமே.  

மரணத்திற்கான காரணம்:

அப்போது, அவரது மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறியபோது ​​​​அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். வலி நிவாரணி மருந்தினால் புரூஸ் லீயின் மூளை வீங்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. 

புதிய ஆய்வு விளக்கம்:

அவர் இறந்து  பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது.  அதாவது புரூஸ் லீ இறந்தது எந்த மருந்தினாலும் அல்ல எனவும் அதிக தண்ணீர் குடித்ததால் என்றும் தற்போது கூறியுள்ளனர்.

புரூஸ் லீ அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் மரணம் அடைந்ததாக விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை கூறுகிறது. புரூஸ் லீயின் மரணத்திற்கு காரணம் ஹைபோநெட்ரீமியா எனவும் இது இரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரிக்க செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனால்  மூளையின் செல்களில் வீக்கம் ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.

மனைவியின் வாக்குமூலம்:

புரூஸ் லீ இறந்தபோது, ​​​​அவரது சிறுநீரகங்கள் மோசமாக இருந்தன எனவும் அதனால்தான் அவர் குடித்த தண்ணீர் வடிகட்டப்படவில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  அத்தகைய சூழ்நிலையில், அவரது உடலில் தண்ணீர் நிறைந்திருந்தது எனவும் இந்நிலையில் நடிகரின் உடலில் நீரின் அளவு அதிகமாகி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

புரூஸ் லீயின் மனைவி லிண்டா லீ கேட்வெல் ஒருமுறை நடிகரின் திரவ உணவைப் பற்றித் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண்...” ஆண்டானியோ குட்டெரஸ்!!