மறக்க முடியுமா....நாடாளுமன்ற தாக்குதலின் 21ம் ஆண்டு நினைவு தினம்...அன்று நடந்தது என்ன?!!

மறக்க முடியுமா....நாடாளுமன்ற தாக்குதலின் 21ம் ஆண்டு நினைவு தினம்...அன்று நடந்தது என்ன?!!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று.  2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  

நாடாளுமன்ற தாக்குதல்:

நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் நடந்து 21 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் நினைவு இந்தியர்களின் இதயங்களில் மாறாத காயமாக பதிந்துள்ளது.  21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடைபெற்ற  இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  அதே நேரத்தில், தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

நினைவுகூரப்பட்ட தியாகம்:

இதையொட்டி, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

அன்று நடந்தது என்ன?:

டிசம்பர் 13, 2001 அன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.  அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.  இதனால் சபை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதனால் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நாடாளுமன்றத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.

எனினும், துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் இருந்தனர்.  அப்போது, ​​ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.  நாடாளுமன்றத்தின் வாயிலில் ஒரு பயங்கரவாதி மனித வெடிகுண்டாக மாறி வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.  அம்பாசிடர் காரில் உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரையும் பயங்கரவாதிகள் ஒட்டியிருந்தனர்.

தாக்குதலுக்கு மூளையாக:

இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் முகமது அப்சல் குரு மற்றும் சவுகத் ஹுசைன் ஆகியோர் மூளையாக செயல்பட்டனர் என்பது தெரிய வந்தது.  அப்சல் குரு  கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 9, 2013 அன்று தூக்கிலிடப்பட்டார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உச்சநீதிமன்றத்தின் பெயர் பரிசீலனையை ஏற்குமா மத்திய அரசு?!!