போ… போய் மதன் ஆடியோவை முழுச கேட்டுட்டு வந்து வாதாடு: மதன் வழக்கறிஞருக்கு நீதிபதி குட்டு….

யூடியூபர் மதனுக்கு ஜாமின் வழங்கக்கோரிய மனுவில், மதனின் ஆடியோவை முழுமையாக கேட்ட பின்னர் வந்து வாதாடுங்கள் என மதன் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.  

போ… போய் மதன் ஆடியோவை முழுச கேட்டுட்டு வந்து வாதாடு: மதன் வழக்கறிஞருக்கு நீதிபதி குட்டு….

யூடியூபர் மதனுக்கு ஜாமின் வழங்கக்கோரிய மனுவில், மதனின் ஆடியோவை முழுமையாக கேட்ட பின்னர் வந்து வாதாடுங்கள் என மதன் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.  

தமிழகத்தில் TOXIC MADAN 18+ என்ற பெயரில் மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவர் வெளியிடும் வீடியோக்களில் பெண்களை ஆபாசமாகப்  பேசுவது, அவருடன் விளையாடுபவர்களை தரக்குறைவாகப் பேசுவது இடம் பெற்றிருந்தது. குறிப்பாக நாட்டில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் இளைஞர்கள் விளையாடி வரும் நிலையில், இந்த விளையாட்டைச் சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் குரல் வர்ணனையுடன் நேரலையாக சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பி வந்தார்.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த அபிசேக் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரில், மதன் நடத்தும் யூடியுப் சேனலில் பெரும்பாலும் ஆபாச ஆடியோக்களே அதிகளவில் பதிவிடப்படுகிறது எனவும், இதனை பள்ளி மாணவர்களே பார்ப்பதால் அந்த சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் இதேபோன்று மதன் மீது 167 புகார்கள் ஆன்லைன் மூலம் பெற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த புகார்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மதன் தலைமறைவானார். பின்னர் TOXIC MADAN 18+ என்ற சேனலின் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்த போலீசார், மதனுடன் வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் அவருடையது  என்பதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மதனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மதன்குமார் தரப்பில்,  சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில்  மதன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கு பதிலளித்த நீதிபதி தண்டபாணி, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு உள்ளது.  யூடியூப்பில் மதன் பேச்சை கேட்டுள்ளீர்களா என மதன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் மதனின் ஆடியோவை முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.