திமுகவுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தாரா ? ஜோலார்பேட்டை எம்எல்ஏ! மேட்டர் தெரிஞ்சி பயங்கர கடுப்பான உ.பிக்கள்! ஓஹோ விஷயம் அப்படி போகுதோ..!

திமுகவுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தாரா ? ஜோலார்பேட்டை எம்எல்ஏ! மேட்டர் தெரிஞ்சி பயங்கர கடுப்பான உ.பிக்கள்! ஓஹோ விஷயம் அப்படி போகுதோ..!

 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. பல இடங்களில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை ஆளும் கட்சியான திமுகவின் தேர்தல் நேர செயல்பாடுகள் உறுதி செய்தன. இந்த சூழலில், இந்த தேர்தல் வெற்றியில் பஞ்சாயத்துக்களுக்கும் குறைவில்லை.

அப்படி ஒரு சம்பவம் தான் ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகிய இருவருக்கும் தங்கள் ஆதரவாளர்களை ஒன்றிய தலைவராக தேர்ந்து எடுக்க போட்டா போட்டி போட்டதாகவும், இறுதியில் தேவராஜ் தரப்பு சாலையில் அமர்ந்து கதிர் ஆனந்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகி கட்சியினரிடையே சலசலப்பை உண்டாக்கியது. 

என்னதான் நடந்தது ?

ஆலங்காயம் ஒன்றிய தலைவர் தேர்தலில், திமுக பெரும்பாலான கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. மொத்தம் 18 வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியில் திமுக வேட்பாளர்கள் 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக இரண்டு இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். எனவே ஒன்றிய தலைவர் பொறுப்பில் திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்து காத்திருந்த சூழலில்தான் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மூலம் பிரச்சனை கிளம்பியது.

தேவராஜ் தனது இரண்டாவது மகன் பிரபாகரனின் மனைவி காயத்திரியை ஒன்றிய தலைவராக கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் அவரது மருமகள் ஒன்றிய தலைவர் பதவிக்கு வருவதை எங்கள் கவுன்சிலர்களே விரும்பவில்லை. அதற்கு தேவராஜின் அணுகுமுறைதான் காரணம்" என்றனர் 

தேவராஜ் குடும்பத்தில் அனைவருக்குமே திமுகவில் பொறுப்பு ! 

மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் குடும்பத்தில் அனைவருமே பொறுப்பில் உள்ளனர். தேவராஜிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் டாக்டர் செந்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். திமுக மருத்துவர் அணியில் இருக்கிறார். அரசியல்வாதி வீட்டு வாரிசு என்பதால் மற்ற மருத்துவர்களுடன் கூட அடிக்கடி பஞ்சாயத்து தான் செய்கிறாராம்.

அடுத்ததாக பிரபாகரன். இவர் திமுக பொறியாளர் அணியில் இருக்கிறார். தற்போது பிரபாகர் அவருடைய மனைவியான காயத்ரியை தான் ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு கொண்டுவர தேவராஜ் முயன்றார். ஆனால் கட்சியினரிடையே ஆதரவு இல்லாத நிலையில், ஒரு பிரிவு காயத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம்.. தேர்தலின் போது தனது மருமகள் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே இருந்தவர், தேர்தலில் நின்ற தன் சொந்தக்கட்சி வேட்பாளர்களை டீலில் விட்டுவிட்டார். அதனால் கடுப்பான மற்ற கவுன்சிலர்கள், மக்கள் செல்வாக்கு வைத்துள்ள சங்கீதா பாரி என்பவரை ஒன்றிய தலைவராக்க கொண்டுவர முடிவு செய்தனர் .

மோதல் உண்டாக காரணம் !

தன் மருமகளை எதிர்த்து சாதாரண கழக தொண்டர் ஒருவர் வெற்றிப்பெற்றால், அது தனது கவுரவதிற்கு   இழுக்காக அமையும் என்ற காரணத்தால் அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த கவுன்சிலர்களை வளைக்க திட்டமிட்டார். ஆனால் வெற்றி பெற்றவர்கள், தேவராஜ் மருமகளுக்கு ஆதரவாக வாக்கு அளித்தால் தங்களுக்கு வாக்கு அளித்த பொது மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் யாரும் பேரத்திற்கு படியவில்லை. இதையடுத்தே, சங்கீதா பாரி என்பவரை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவர்களின் மகன் கதிர் ஆனந்த் முயலுவதாகவும் சாதி ரீதியாக கட்சியை பிரிக்க பார்ப்பதாகவும் தேவராஜ் தரப்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக உறுப்பினர்களுக்கு எதிராகவும், திமுக ஒழிக என சில இடத்திலும், போலீஸ் அராஜகம் ஒழிக என்றும் கூக்குரல்  எழுப்பினர். இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், காவல் துறைக்கு எதிராகவும் கூக்குரல் எழுப்பியது, முதல்வரையே  எதிர்த்து முழக்கமிட்டதற்கு சமமாக உள்ளது என கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, இது திமுக  தலைமையை  கடுப்பேற்றி உள்ளது.

அதாவது தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், கட்சி தோழர்களை எதிரி போல பார்க்கிறார்.  கழக வளர்ச்சிக்காக செயல்படாமல் தன் சுயநலத்திற்காக களத்தில் இறங்கி உள்ளார். தேர்தல் நேரத்தில்  கழக உறுப்பினர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யாமல், மருமகள் வெற்றிக்காக மட்டும் ஸ்பெஷல் அடென்ஷன் கொடுத்தார் தேவராஜ் என உள்ளூர் வாசிகள் கூடிக்கூடி பேசிக்கொள்கின்றனர். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று இன்னொரு சம்பவம் நடந்து இருக்கு.. ராணிப்பேட்டை நெமிலியில், சட்டமன்ற உறுப்பினரும், மா.செ வுமான காந்தி தலைமையில் பாமக ஆதரவுடன் தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளனர். பாமக வேட்பாளருக்கு துணை தலைவர் பதவியும் கொடுத்து உள்ளனர். இப்படி பல இடங்களில்  நடக்க தான் செய்கிறது. இதற்கெல்லாம் உள்ளூர் செல்வாக்கு முக்கியம் என கருதுகின்றனர். ஆனால் ஆலங்காயத்தில் மட்டும் கதிர் ஆனந்தை இழுத்து சாதி சாயம் பூச காரணம் என்ன என தீவிரமாக விசாரித்தால், கட்சியிலும் சரி.. தொகுதியிலும் சரி.. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு தான் செல்வாக்கு. கடந்த 2019 மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பெரும்பாலான ஆம்பூர்,வாணியம்பாடி பகுதி மக்கள், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து உள்ளனர். 

மாநிலம் முழுவதும் கழகம் வெற்றியை பெற்ற போதிலும் இசுலாமிய மக்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாக இருந்த வாணியம்பாடியில் அதிமுக வென்றது, திமுகவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு காரணம் தேவராஜ் நடத்தையும், உள்ளூர் செல்வாக்கு இல்லாததும் என்கின்றனர் ஊர் மக்கள். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில், தன் சொந்த தொகுதியை விட்டுவிட்டு,ஜோலார்பேட்டையில் எம்எல்ஏ சீட் பெற்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தேவராஜ். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இஸ்லாம் மக்கள் மனதில் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்று உள்ளார் கதிர் ஆனந்த் என்று... இந்த செல்வாக்கை உடைத்து, தனது மாவட்ட பொறுப்பை எப்படியும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திட்டம் போட்டு இப்படி ஒரு வேளையில் இறங்கி உள்ளாராம் தேவராஜ். 

மேலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும், தனது மருமகள் தோல்விக்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனிவேல் மற்றும் ஞானவேல் ஆகியோர், அதிமுக மற்றும் பாமக கட்சியினர் உடன் சேர்ந்து செயல்பட்டதாக தெரிவிக்க, மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரையும் நீக்கி உள்ளார் பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன்.  ஆனால்  இங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கு... அதாவது, இந்த ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனிவேல் மற்றும் ஞானவேல் கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால், காலியாக உள்ள அந்த 2 பதவியை, தன் மகன் பிரபாகரனுக்கு கிடைக்க வேண்டும் என்றும், இன்னொரு பொறுப்பு  அவருடைய மைத்துனரும், முன்னாள் தலைவருமான அசோகன் அவர்களுக்கும் கிடைக்க காய் நகர்த்தி வருகிறார் தேவராஜ். 

ஆனால் இதற்கெல்லாம் இடைஞ்சலா கதிர் ஆனந்த் இருக்கிறார் என கருத காரணம்.. ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் இஸ்லாம் மக்களின் மனதில் மிகுந்த செல்வாக்கை கதிர் பெற்று இருப்பதே. மேலும், தன்னுடைய  மா.செ பதவியை  தக்க வைத்துக்கொள்வதற்கும், வரும் குறுகிய காலத்தில் நடைபெற உள்ள வாணியம்பாடி நகரத்திற்கான தேர்தல், ஆலங்காயம் பேரூர் - க்கு உண்டான தேர்தலில் முன்னிலை வகிக்க திட்டமிட்டு  உள்ளார் தேவராஜ். ஆனால், உள்ளூர் செல்வாக்கை பொறுத்தவரையில் அதிக செல்வாக்கு தேவராஜை  காட்டிலும், கதிர் ஆனந்துக்கு உள்ளது. எனவே கதிர் அனந்த் முன்னையில் வானியம்பட்டி நகரத்திற்கான  தேர்தலை சந்தித்தால், திமுக கூடுதல் ஆதரவுடன் வாக்கு பெரும் என ஆணித்தரமாக குறிப்பிடுகின்றனர்  உள்ளூர் உடன் பிறப்புகளும், பொதுமக்களும்.

மாறாக, தேவராஜ் தலைமையில் நடந்தால், எப்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக வாணியம்பாடி தொகுதியை அதிமுக கைப்பற்றி பேசும் பொருளா மாறியதோ, அதே நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என மனதிற்குள் குமுற தொடங்கி உள்ளனராம்  திமுகவினர். இதற்கு உதாரணமாக... ஏற்கனவே சொன்ன மாதிரி, மக்களவை தேர்தலில் கதிர் வாணியம்பாடியில் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றதும், சட்டமன்ற தேர்தலில் அதே வாணியம்பாடியில் மா.செ தேவராஜ் இருந்தும், அதிமுக விற்கு தாரை வார்த்து கொடுத்ததும் அடங்கும் என்கின்றனர் உள்ளூர் வாசிகள். இதுதான் நடந்தது என வேதனையை தெரிவிக்கிறார் ஆலங்காயம் உடன்பிறப்பு. 

தேவராஜை பொறுத்தவரையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் கலைஞர் முதல்வராக இருந்தபோதே, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தேவராஜை நீக்கினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து துரைமுருகன் தயவால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டாராம் தேவராஜ் 

சந்தேக வளையத்தில் தேவராஜ் குடும்பம் !

தேவராஜ் செயல்பாடு மீது சந்தேகம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் உளவு துறையினர் மூலம் அறிக்கை ஒன்றை கேட்டு இருந்தார். அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலில் தேவராஜிற்கு செல்வாக்கு இல்லாத காரணத்தால் அவரது மருமகளை சொந்த கட்சியின் கவுன்சிலர்களே ஆதரிக்கவில்லை என்ற நிலையில் தான், துரைமுருகன் மற்றும் அவரது மகன் மீது பொய் தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. 

இதன் அடிப்படையில், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களை விரைவில் மீண்டும் கட்சியில் இணைத்து பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும், உண்மையான பிரச்சனைக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதில் தேவராஜ் பெயர் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.