பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று சொன்னேன்னா? அண்ணாமலை விளக்கம்!

பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று சொன்னேன்னா? அண்ணாமலை விளக்கம்!

பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று சொன்னேன்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சையான அண்ணாமலையின் பேச்சு:

சமீபத்தில் கடலூரில் மாவட்டத்தில் செய்தியாளர்களை ”குரங்குகள் தாவுவது போன்று ஏன் தாவுகிறீர்கள்; நான் தான் பேசமாட்டேன் என்று கூறிவிட்டேனே” என்று கூறி அவர்களிடம் அண்ணாமலை கடுமையாக நடந்துக்கொண்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகியது. 

கண்டனம் தெரிவித்த கனிமொழி:

இதனை கண்டித்து பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, பத்திரிகையாளர்களை இழிவுப் படுத்தி பேசுவது மற்றும் தரம் தாழ்த்தி பேசுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று கூறினார். மேலும், இப்படி பேசுபவர்கள் அவர்களின் தரத்தை, அவர்களே தாழ்த்திக் கொள்ளும் செயலாகும் என்று பத்திரிக்கையாளர்களை அவதூராக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு எம்பி கனிமொழி தக்க பதிலடி கொடுத்து பேசினார். 

இதையும் படிக்க: "பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

அண்ணாமலை விளக்கம்:

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தான் சொன்னதாக வெளியான சர்ச்சைக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த செய்தியாளர் விடாப்பிடியாக கேட்ட கேள்விக்கே, குரங்கு தாவுவது போல எனக் கூறியதாக விளக்கமளித்தார். அந்த வார்த்தையை திமுக ஐடி பிரிவினர் சர்ச்சைக்குரிய வகையில் திரித்து, ஒரு சில பகுதியை மட்டும் கட் செய்து பரப்பி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.