மகன் வேண்டாம்....தந்தையின் பெயர் மட்டும் வேண்டுமா...!!!!மகாராஷ்டிராவின் தந்திர அரசியல்!!!

மகன் வேண்டாம்....தந்தையின் பெயர் மட்டும் வேண்டுமா...!!!!மகாராஷ்டிராவின் தந்திர அரசியல்!!!

மகாராஷ்டிராவில் மெகா விகாஸ் கூட்டணியிலான சிவசேனா ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோல்வியுற்று, முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்:

இந்நிலையில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தவ் தாக்கரேவை தாக்கி பேசினார். சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்கு அவரது செயல்பாடுதான் காரணம் என்று கூறினார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவாரை நம்பியது மிகப்பெரிய அரசியல் தவறு என்றும் முதுகில் குத்தியதற்கு பழிவாங்க, அந்த நபர் நீண்ட காலம் வாழ வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏன் முதுகில் குத்தினீர்கள்:

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சவால் விடுத்திருந்தார். உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக நோட்டீச் அனுப்பப்பட்ட நிலையில் பால் தாக்கரே மீதான மரியாதையால் ஆதித்யா தாக்கரேவிற்கு நோட்டீஸ் அளிக்கவில்லை என ஷிண்டே ஆதரவாளர்கள் கூறியது குறித்து ஆதித்யா தாக்கரே கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார்.

மேலும் தெரிந்துகொள்க:  யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை - ஆதித்யா தாக்கரே ஆவேசம்!

அதாவது, சிவசேனா – காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியானது சட்டரீதியான வெற்றி எனவும், அது நீதிமன்ற சட்டத்தின் முன் நிற்கும் எனவும் கூறினார். அதே சமயம், யாரிடமும் அனுதாபத்தை சிவசேனாவோ, நானோ எதிர்பார்க்கவில்லை எனவும் ஆவேசமாக பதிலளித்தார். 

மேலும் தெரிந்துகொள்க:  பாஜக கூட்டணிக்கு சவால் விடுத்த ஆதித்யா!!!என்ன சவால்??!!

ஷிண்டே குழு எம்எல்ஏக்களிடம் சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, ”நாங்கள் உங்களுக்கு அனைத்தையும் கொடுத்தோம், ஏன் எங்களை முதுகில் குத்தினீர்கள்” எனவும் கேட்டிருந்தார் ஆதித்ய தாக்கரே.

மகன் வேண்டாம்...:

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிற்கு பல நெருக்கடிகளை அளித்து நம்பிக்கை துரோகம் செய்தவர் ஏக்நாத் ஷிண்டே.  உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேவால் எழுப்பப்பட்ட கட்சி சிவசேனா.  அதில் குழப்பத்தை ஏற்படுத்தி பிளவை ஏற்படுத்தியவர் ஏக்நாத்.  மகனுக்கு துரோகம் இழைத்து மக்கள் நலத்திட்டங்களுக்கு தந்தையின் பெயரை பயன்படுத்துகிறார் ஏக்நாத்.  பால்தாக்கரேயின் பெயர் இல்லாமல் மகாராஷ்டிரா அரசியல் கடினம் என்பது ஷிண்டேவுக்குத் தெரிந்த காரணத்தினாலேயே மாநிலத்தில் பால் தாக்கரே பெயரில் 700 சுகாதார மையங்களை திறக்க போவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.

                                                                                                                -நப்பசலையார்

இதையும் படிக்க:  ஒரே கட்சி முறையை நோக்கி நகர்கிறதா இந்தியா.....!!!!