கட்சியின் முக்கிய புள்ளியை நீக்கிய துரைமுருகன்...ஓகே சொன்ன ஸ்டாலின்...நடந்தது என்ன?

கட்சியின் முக்கிய புள்ளியை நீக்கிய துரைமுருகன்...ஓகே சொன்ன ஸ்டாலின்...நடந்தது என்ன?

திமுகவின் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே. எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்...

கழக செய்தித் தொடர்பு செயலாளர் நீக்கம்:

திமுக கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான கே. எஸ்.ராதாகிருஷ்ணன் மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

செய்திக்குறிப்பு:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுகவின் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே. எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனம்:

ஆனால், கே. எஸ். இராதாகிருஷணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்தது தான் பின்னணி காரணமாக கூறப்படுகிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்று, 19 ஆம் தேதி யார் தலைவர் என்பதை அறிவித்தனர். இது குறித்து திமுகவின் கட்சி தலைமையே எந்தவொரு கருத்தும் முன்வைக்காத நிலையில் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கே. எஸ்.ராதாகிருஷ்ணன் தலைவர் தேர்தல் முறையையும், தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபி எஸ்...எப்படி தப்ப போகிறார்?

ஓகே சொன்ன ஸ்டாலின்:

இந்நிலையில் திமுக உடன் கூட்டணியும், சுமூக நட்புறவையும் வைத்துள்ள காங்கிரஸ் தரப்பில் இது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த விஷயம் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரும் ஆன மு.க.ஸ்டாலினுக்கு தெரியவரவே, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா?:

இந்த பின்னணியில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது நடந்திருக்கும் இந்த நீக்கம் அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும், அரசியல் பார்வையாளர்கள் சிலர், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இருப்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறிவருகின்றனர்.