ஈ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு...தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுமா...?

ஈ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு...தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுமா...?

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 11:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பொதுக்குழு செல்லாது:

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜுன் 23 ஆம் தேதிக்கு முன்னிருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடரும் என்றும் தீர்ப்பு அளித்திருந்தார். 

ஈபிஎஸ் மேல்முறையீடு:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது,  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/ADMK-office-violence-Case-registered-against-OPS

அனல் பறக்கும் விவாவதங்கள்:

இன்று நடைபெற்ற விசாரணையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதிமுகவில் இனி ஓ.பி.எஸ். உடன் இணைந்து செயல்பட முடியாது என ஈ.பி.எஸ். தரப்பு திட்டவட்டமாக கூறியது. 

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாளைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பிற்கும் உத்தரவிட்டதுடன், தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்...

ஈபிஎஸ்க்கு சாதகமாக அமையுமா?:

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தனிநீதிபதி அளித்த ”ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது” என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டராங்களில் எழுந்து வருகிறது.