மறக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா ஐஎன்எஸ் விக்ராந்த்தில் காங்கிரஸின் பங்களிப்பு....!!!!

மறக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா ஐஎன்எஸ் விக்ராந்த்தில் காங்கிரஸின் பங்களிப்பு....!!!!

முற்றிலும் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  19 ஆயிரத்து 341 கோடி ரூபாய் செலவில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு:

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.  இதனையடுத்து, ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது. கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

மோடி பெருமிதம்:

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், இந்தியாவின் முன்னேற்றத்தை காட்டுவதாக தெரிவித்தார். வலுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், கடலின் மகத்தான சக்தியும் பெண்களின் வலிமையும் இணைந்து புதிய இந்தியாவின் உயர்ந்த அடையாளமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.  விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய திறன் மற்றும் திறமைக்கு சான்றாகும் என்றும் மோடி கூறினார்.

1999லேயே தொடங்கப்பட்ட திட்டம்:

இந்தியாவில் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் 1999 முதல் அனைத்து அரசாங்கங்களின் கூட்டு முயற்சியாகும்.  1971 போரில் இந்தியாவிற்காக சிறப்பாக சேவை செய்த ஐஎன்எஸ் விக்ராந்தை இந்த நேரத்தில் நினைவு கூர்வது மிகவும் அவசியமாகும். அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் இங்கிலாந்தில் இருந்து அதைப் பெறுவதில் மிக முக்கிய பங்கு வகித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட விதை:

பிரதமர் மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் தயாரிப்பிற்கான முதல் விதை 2013ல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. ஆன்றணி அவர்களால் போடப்பட்டது.  ஆனால் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் முந்தைய ஆட்சிகளின் பங்களிப்பை குறிப்பிட மறந்த்தாகவே தெரிகிறது.  பல அரசுகளின் பல ஆண்டு முயற்சியால் இந்தியா இன்று இந்த பெருமையை அடைந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அதற்காக பணியாற்றிய வல்லுநர்களின் முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டும்.

நினைவுக் கல்:

உரையில் குறிப்பிட மறந்திருந்தாலும் 1971 போரில் சிறப்பு பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்கு நினைவுக் கல் அல்லது நினைவு பலகை ஒன்றை திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.

இதையும் படிக்க: மறைந்தும் வாழும் தென்னிந்திய பவர் ஸ்டார்...!!!!