ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த பிரபல நடிகர்...ஈபிஎஸ் கூட எதிர்பார்க்காத டுவிஸ்ட்...யார் இந்த பிரபலம்?

ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த பிரபல நடிகர்...ஈபிஎஸ் கூட எதிர்பார்க்காத டுவிஸ்ட்...யார் இந்த பிரபலம்?

பூசல்:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதலே உட்கட்சி பூசல் ஆரம்பானது. அன்று தொடங்கிய இந்த பூசல் இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை. இப்படி ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் ஆன மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் ஜூன் 23 முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி, ஓபிஎஸ் கொஞ்சம் கூலாக இருக்கிறார். ஆனால் ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை தொடர்ந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கின்  தீர்ப்பை பொறுத்தே ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் அரசியல் எதிர்காலம் அமைந்திருக்கிறது.

ஓப்பனாக அழைப்பு விடுத்த ஓபிஎஸ்:

அதிமுக கட்சி தொடர்பான பல்வேறு பிளான்களை தன்வசம் வைத்திருக்கும் ஓபிஎஸ், வெளிப்படையாகவே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து டிடிவி தினகரனும் சசிகலாவும் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகளும் வெளியாகி வருகின்றனர்.

ஓபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு:

இதனைத்தொடர்ந்து,  ஓபிஎஸ் பக்கம் ஆதரவு பெருகி வருகிறது. ஈபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் பக்கம் சாய்வதாக அவ்வப்போது செய்திகளும் வெளியாகி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் குஷியில் வலம் வருகிறார். அவ்வப்போது பல ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

மேலும் படிக்க: https://malaimurasu. com/posts/cover-story/Is-Stalin-indirectly-supporting-EPS

நடிகர்களின் ஆதரவு:

அதிமுக நிர்வாகிகளை தொடர்ந்து, நடிகர்கள் ராமராஜன், தியாகு, அஜய் ரத்தினம் என சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை ஓபிஎஸ்க்கு அளித்து வருகின்றனர். அதன்படி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பிரபல நடிகர் ஒருவர் தென்மண்டலங்களில் பிரச்சாரம் செய்ய போவதாக செய்தி பரவியது. ஏனென்றால், கட்சி நிர்வாகிகளை விட சினிமா பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்தால் தங்கள் தரப்புக்கு பலத்தை அளிக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு நம்புவதால், பிரபல நடிகர் ஒருவரை களமிறக்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

எதிர்பார்க்காத ஈபிஎஸ்:

சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதனை வெளிகாட்டி கொள்ளாத ஈபிஎஸ், “அவர்கள் நடத்துவது சினிமா கம்பெனியா?” என்று ஓபிஎஸ்ஸை கலாய்த்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன என்பதை உற்று கவனித்து வருகிறார்களாம் ஈபிஎஸ் தரப்பினர்...

யார் அந்த பிரபலம்:

இதற்கிடையில் சினிமா பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில்,  அவர் யாராக இருக்கும் என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது. ஒருவேளை நடிகர் செந்திலா? ராமராஜனா? ராதாரவியா? என்ற யூகங்கள் ஒரு பக்கம் நிலவி வருகிறது. ஏற்கனவே, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிகழ்ந்து வரும் நிலையில், வரிசையாக நடிகர்கள் பட்டாளம் ஓபிஎஸ்ஸூக்கு ஏன் இந்த நேரத்தில் ஆதரவு தர வேண்டும் என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகிறது.