ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்யும் பெண் காவலர்.... அனுமதி அளித்த உள்துறை அமைச்சகம் ...!!!! 

ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்யும் பெண் காவலர்.... அனுமதி அளித்த உள்துறை அமைச்சகம் ...!!!! 

உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வேறுபட்டு அல்லது சிறுபான்மை பாலினர் என அழைக்கப்படுவது ஒருவரை எந்த மாதிரியான நிலையில் வைத்திருக்கும் என்பதை நாம் பல நேரங்களில் சிந்திப்பதே இல்லை, இந்தியாவில் 490,000 என்ற எண்ணிக்கையில் உள்ள திருநங்கைகள் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் உலக மக்கள் தொகையில் ஒரு பகுதியாக உள்ளனர். இதில் திருநம்பிகள் அடக்கம் இல்லை. திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கப்படுகின்றனர்.

ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள். “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது “திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம்.  “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முயன்று கொண்டிருக்கிறோம் ஆனால். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இதுவரை திருநர்களை மையப்படுத்தி வெகு சில படங்கள் மட்டுமே வெளிவந்த நிலையில் தற்போது வெளிவரவுள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படம் அவர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அக்ஷரா ஹாசன் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து திருநம்பியாக மாறப்போகும் ஒரு பெண்ணாக நடிக்கவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகள் அனைத்துமே, ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும், அவர் சிறு வயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் உளவியல் ஆர்வலர்கள் கண்டறிந்து அதனை உறுதி செய்த பின்னர் அவரின் மனுவை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்திற்கு காவல் தலைமையகம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அந்த பெண் காவலர், ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு தற்போது அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மாற்று பாலின அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

நாட்டின் சட்ட விதிகளின்படி, ஒரு இந்தியக் குடிமகன் தனது மதம் மற்றும் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனது பாலினத்தை தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதன் அடிப்படையில், இந்த அனுமதியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்று, அம்மாநில அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

"மூன்றாம் பாலினத்தவர்" ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் பல கதைகள் "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்" போன்ற பல இதிகாசங்கலிள் காணப்படுவது பண்டைய மற்றும் இடைக்கால சமூகத்தின் ஒரு சாதாரண பகுதியாக அவர்கள் கருதப்பட்டனர் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் இன்றைய சமூகத்தில் நீதித்துறை, மருத்துவம், ராணுவம், அரசியல், சினிமா, விளையாட்டு, என்று அணைத்து துறைப்பிரிவுகளில் அவர்கள் மேல்நோக்கி சென்றாலும் வெகுஜன மக்களிடையே அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை கிழ்நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.