நான்கு திருமணம் அல்ல; நாற்பது திருமணம் கூட செய்வேன்: நடிகை வனிதா காட்டமான பதில்!

நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன் அது என் சொந்த விருப்பம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நான்கு திருமணம் அல்ல; நாற்பது திருமணம் கூட செய்வேன்: நடிகை வனிதா காட்டமான பதில்!
Published on
Updated on
1 min read

இரண்டு தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவலவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார் மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க்காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன். இது எனது அடுத்த திருமணமா என்று சமுக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர். பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமாக ஒன்றாக உள்ளது.தற்கொலை, பாலியல் போன்றவை அதிகமாக தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் மிகவும் பெருமை படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார்.  பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும் அதற்கு பக்கபலமாக ஊடங்கங்கள் இருக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com