#GetOutRavi: இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டேக்...!

#GetOutRavi: இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டேக்...!

தமிழக ஆளுநரை திரும்பபெறக்கோரி ட்விட்டரில் GetOutRavi என்ற ஹாஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மோதல் போக்கு:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கானது நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, மாநில அரசுக்கு எதிராக ஆளுநர்  செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றன. அதற்கேற்றார் போல், தமிழக ஆளுநரும்  மாநில அரசு சட்டசபையில் கொண்டுவரும் மசோதாக்கலுக்கு ஒப்புதல் அளிக்காமலும் சில சட்டத்துக்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் வழங்குவதுமாக உள்ளார். மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ஆளுநரே, எதிர்க்கட்சி போல் செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், சமீபத்தில் ஆளுநரை திரும்பபெறக்கோரி குடியரசு தலைவரிடம் கடிதம் வழங்கினர். 

ஒப்புதல் வழங்காத ஆளுநர்:

இதனிடையே, ஆன்லைன் ரம்மி  சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

மாநில அரசுக்கு கேள்வி:

அதற்கு பதிலாக மசோதா தொடர்பான சில விளக்கத்தை அரசிடம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டிருந்ததார்.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஆளுநர்களுக்கு வலியுறுத்திய டி கே எஸ் இளங்கோவன்

விளக்கம் அளித்த மாநில அரசு:

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்துவருகிறார். 

ஆளுநரை சந்தித்த ரகுபதி:

இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று(01.12.2022) நேரில் சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரிடத்தில் சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாகவும், சட்டத்தில் சில சந்தேகங்கள் உள்ளதால் அதனை தெளிவுப்படுத்திக்கொண்டு விரைவில் ஒப்புதல் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்:

இந்நிலையில் தமிழக ஆளுநருக்கு எதிராக #GetOutRavi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆளுநரை திரும்பபெறக்கோரி மாநில அரசு கோரிக்கை வைத்து வரும் நிலையில், சர்வதேச அளவில் #GetOutRavi  என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாவது குறிப்பிடத்தக்கது.