16, 17 வயது தான் ... ரொம்பவும் கொடூரமான தொல்லைகள்...  வறுமையை பயன்படுத்தி மாதக்கணக்கில் சீரழித்த பயிற்சியாளர் நாகராஜன்!!

16, 17 வயது தான் ... ரொம்பவும் கொடூரமான தொல்லைகள்...  வறுமையை பயன்படுத்தி மாதக்கணக்கில் சீரழித்த பயிற்சியாளர் நாகராஜன்!!

பி.எஸ்.பி.பி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், அதேபோன்ற பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்நிலையில் அதே போல சம்பவம் விளையாட்டு துறையில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பிரபல தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற தடகள பயிற்சி மையத்தை  நடத்திவருகிறார். இந்த பயிற்சி மையம் மூலம் பல முன்னணி தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்கியுள்ளார். இதனால் தமிழக விளையாட்டு துறையில் அனைவரும் மதிக்கத்தக்க நபராக வலம்வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் பயிற்சி பெரும் அடித்தட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என தகவலை பத்திரிகையாளர் ஒருவர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்.  

தமிழகத்தில் விளையாட்டு துறை தொடர்பான தொடர்ந்து எழுதி வரும் பத்திரிகையாளர் ரகு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்வரின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு பயிற்சியாளர் நாகராஜன் மேல் பாலியல் குற்றச்சாட்டை  எழுப்பினார். அந்த குற்றச்சாட்டில் நாகராஜனால் சுமார் 16  முதல் 18 வயதுக்கு உற்பட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், அதை நாகராஜனிடம் பயிற்சி பெற்ற  ஒருவரே அவரிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு அந்த பெண் அனுப்பிய தகவலையும் அந்த பதிவில்(screenshot) இணைத்திருந்தார். 

அந்த screenshot இல் பயிற்சியாளர் நாகராஜன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதைப் பற்றி தான் குரல்கொடுத்ததும் நாகராஜனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவரை பற்றி குரல் கொடுத்துள்ளார்கள். ஆனாலும் இவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காததாலும், நாகராஜன் இனி இது போன்று நடந்துகொள்ள மாட்டேன் என்று கூறியதாலும் அந்த விஷயத்தை  விட்டுவிட்டார்கள். 

மேலும் நாகராஜன் வறுமையில் வாடும் பெண்களையும், கிராமப் புறங்களில் இருந்துவரும் குழந்தைகளையுமே குறி வைப்பதாகவும், அவர்களே அவரை எதிர்த்து குரல் கொடுக்கமாட்டார்கள் என்பதாலும் இப்படி செய்வதாக கூறியுள்ளார். அதோடு நாகராஜனால் பல பெண்கள் உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் சிலர் தொடர்ந்து மாதக்கணக்கில் அவரால் துன்பறுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் 16 அல்லது 17 வயது பெண் ஒருவர் நாகராஜனை கொல்லவும், தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தார் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.