முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது!  

கேரளாவில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் புது மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது!   

கேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார். முன்னதாக திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து 50 சவரன் நகை போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக 50 சவரன் நகையை கணவரும் மாமியாரும் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் நகையை தர மறுத்துவிட்டார்.

அதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு கூட போடாமல் பல நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளனர். பின்னர் ஒரு நாள் அங்கிருந்து தப்பித்த அவர் தந்தை வீட்டிற்கு வந்த நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே கணவர் வீட்டார் அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மகளுடன் சென்று புகார் கொடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் ,இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.