"பெண் சக்தியால் எப்படி வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும்....." பட்ஜெட் குறித்து ஸ்மிருதி!!!

"பெண் சக்தியால் எப்படி வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும்....." பட்ஜெட் குறித்து ஸ்மிருதி!!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதில் வைத்து 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்புகள்:

மோடி அரசின் ஒன்பதாவது பட்ஜெட் உரை முடிவடைந்தவுடன், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் தொடங்கியுள்ளன.  பட்ஜெட் உரை முடிந்து வெளியில் வந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.யும் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவிடம் பட்ஜெட் குறித்த எதிர்வினை குறித்து கேட்டபோது, ​​அது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.

பொதுத்தேர்தலே நோக்கம்:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதில் வைத்து 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.  நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பட்ஜெட்டில் நிச்சயம் ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது, எனினும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இளைஞர்களுக்கு என அரசு எதுவும் கூறவில்லை எனக் கூறியுள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட ரயில்வே:

இந்த பட்ஜெட்டில் ரயில்வேயும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று டிம்பிள் மேலும் தெரிவித்துள்ளார்.  இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் எனவும் கூறியுள்ளார்.
 
ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது:

பரூக் அப்துல்லா பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு ஏதாவது ஒரு உதவி செய்யப்பட்டுள்ளது எனவும் அனைவருக்கும் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். 

வேலையின்மை பற்றி பேசவில்லை:

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில், பட்ஜெட்டில் சில நல்ல விஷயங்கள் உள்ளன, நான் அதை முற்றிலும் எதிர்மறையாக அழைக்க மாட்டேன் எனக் கூறிய அவர் ஆனால் இன்னும் பல கேள்விகள் எழுகின்றன எனவும் MNREGA பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  தொழிலாளர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது? வேலையின்மை, பணவீக்கம் பற்றி பேசவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

பெண்களின் மரியாதை:

இந்த பட்ஜெட் பெண்களின் மதிப்பை அதிகரித்துள்ளதாகவும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான டிஜிட்டல் நூலகம் அறிவிப்பில், மாவட்ட அளவில் குழந்தைகள் எப்படி படித்து வளர்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.  

மேலும்  பெண் சக்தியால் எப்படி வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதன் பிரதிபலிப்பு இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது எனவும் மத்தியதர வர்க்கத்தினரின் நலனும் இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”தேர்தலே நோக்கம்... ஒவ்வொரு பிரிவையும்... அடிக்கப்பட்ட பழைய பறை....” பட்ஜெட்2023 எதிர்ப்பும் ஆதரவும்!!!