நான் அரசியலுக்கு வருகிறேன்... கைதுக்கு முன் அறிவித்த மீராமிதுன்...  

நான் ஒரு சூப்பர் மாடல். என்னைப் பார்த்துதான் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் மேக் அப் போடுகிறார்கள். என்னுடையை ஸ்டைலைதான் பின்பற்றுகிறார்கள் என கூறிக்கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் ஆபாச நடிகை தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன். இதற்கு முன்பாக பல பெண்களிடம் அழகி போட்டி நடத்துவதாக லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி, பின்னர் மாட்டிக் கொண்டு தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று டிமிக்கிக் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

நான் அரசியலுக்கு வருகிறேன்... கைதுக்கு முன் அறிவித்த மீராமிதுன்...   

நான் ஒரு சூப்பர் மாடல். என்னைப் பார்த்துதான் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் மேக் அப் போடுகிறார்கள். என்னுடையை ஸ்டைலைதான் பின்பற்றுகிறார்கள் என கூறிக்கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் ஆபாச நடிகை தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன். இதற்கு முன்பாக பல பெண்களிடம் அழகி போட்டி நடத்துவதாக லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி, பின்னர் மாட்டிக் கொண்டு தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று டிமிக்கிக் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து பிக்பாஸ்க்குள் நுழைந்து சக போட்டியாளர்களிடம் பொய்ப்பேசி வாங்கி கட்டிக் கொண்டார். இதன் தொடர்ச்சியாகவே இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை வைத்து அவரையும் கதறி அழ வைத்தார். ஓவியா விஷயத்தில் பொய் சொல்லி ஜூலி சிக்கியதை போலவே சேரனை அழவிட்ட மீரா மிதுனுக்கும் குறும்படம் போட்டு காட்டினார் கமல்.

இதனால் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன், ஆத்திரத்தில் கமல், விஜய் டி.வி., தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகைளை வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அசிங்கப்படுத்தினார். குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான, விஜய், சூர்யா, ஜோதிகா, இயக்குநர்கள் பாண்டியராஜ், பாரதிராஜா, நவீன் என பலரையும் கீழ்த்தரமாக விமர்சித்தார். அதிலும் விஜய் மனைவி மற்றும் நடிகை ஜோதிகாவை எழுதமுடியாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசினார். அதோடு விட்டாரா, முன்னணி நடிகைகளான ஐஸ்வர்யாராஜேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் தன்னை காப்பியடித்துதான் முன்னணி நடிகைகளாக உள்ளார்கள் என்று கூறினார். ஆனால் இதையெல்லாம் தமிழ்சினிமா பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. 

சமூக வலைளத்தில் ட்ரண்டிங்கில் இருப்பதற்காக என்னென்னமோ செய்தும், ஒன்றும் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால் கடுப்பான மீரா மிதுன் தன்னைவிட 15 வயது குறைவான காதலருடன் சேர்ந்து பட்டியலின சாதி குறித்து தரக்குறைவாக விமர்சித்தார். அந்தப் பட்டியலின இயக்குநர்கள் தன்னைப்போல இருப்பவர்களை தேடிப்பிடித்து நாயகியாக்குவதும், அவர்களே தன்னை ஒதுக்குவதாகவும் கூறினார். அதோடுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்களை வெளியேற்ற வேண்டும் என பேசியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த புகார்களையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். ஆனால் அவரோ தன்னை கைது செய்வது என்பது நடக்காத ஒன்று. தன்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும் என்று போலீசாருக்கே சவால் விட்டார். 

இதைதொடர்ந்து மீராமிதுன் தன்னை கைது செய்ய பலர் மிரட்டுகிறார்கள் என்று என்னை கைது செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். என்னைவிட்டு தமிழ்நாட்டை விட்டு செல்ல முடியாது. அப்படி கூறும் ஆண்கள் என்மீது ஆசைப்படுவதால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்றும் கூறியுள்ளார்.  அதுமட்டுமா? தனக்கு தமிழகத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்று பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சருக்கும் கோரி விட்டார். இதைவிடக் கொடுமை என்னவென்றால், தமிழ்சினிமா விபச்சாரக்கூடமாகிவிட்டதாகவும், தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்துக் கொள்ளாததால், தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், ஆனால் வெளிமாநில பெண்கள் அவர்களின் ஆசைக்கு இணங்குவதால் வாய்ப்புகள் கொடுப்பதாகவும் பேசினார்.

இப்படி சம்மனுக்கு ஆஜராகாத மீரா மிதுன், வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது இந்த வீடியோவை கேரளாவில் தலைமறைவாக இருந்துக் கொண்டு வெளியிட்டார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஐ.பி. அட்ரஸ் மற்றும் போன் சிக்னலை வைத்து போலீசார் மீரா மிதுனை நெருங்கினர். போலீசாரை பார்த்து மிரண்டுபோன மீராமிதுன், தன்னை துன்புறுத்துவதாக கத்தி கூச்சலிட்டார். முந்தைய வீடியோவில் திமிராகவும், தெனாவட்டாகவும் பேசி வீடியோ போட்ட இந்த மீரா மிதுன், தற்போது போலீஸ் கைது செய்ய வரும்போது, முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நிஜமாவே நடக்கணுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க... போலீஸ்னா அராஜகம் பண்ணனுமா..? என்னைத்தொட்டா நான் கத்தியால குத்திக்கிட்டு செத்திடுவேன்... முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாட்டு போலீஸ் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க என்று கதறி கூச்சலிட்டார். இவரை கதறவிட்டு வேடிக்கை பார்த்த போலீசார், பெண் போலீசாரின் உதவியுடன் கைது செய்து அழைத்து வந்தனர்.

பண்றதெல்லாம் பண்ணிவிட்டு ஏதாவது ஒரு மூலையில் சென்று தப்பித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட மீரா மிதுனை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டது சைபர் கிரைம் போலீஸ். மீரா மிதுன் கைதுக்கு தமிழ் சினிமாவிலுள்ள பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படும்முன்பு பேசிய மீரா மிதுன், விளம்பரத்திற்காக நான் எதுவும் பேசவில்லை. உண்மையை மட்டுமே பேசுகிறேன். தமிழ் சினிமாவில் படம் பிடிக்கிறோம் என்ற பெயரில் விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடக்கிறது. தமிழகத்திற்கு நான் வரமுடியாத அளவிற்கு அரசியல் ரீதியாக பிரச்சனைகள் செய்தனர். எனக்கான எதிர்ப்புகளை சமாளிக்க நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசியல்வாதிகளுக்கும், தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் தமிழ்ச்செல்வி என்கிற இந்த ஆபாச நடிகை மீராமிதுன்.