இப்பவும் பண்ண தப்ப உணரலைனா அடுத்த முறையும் தோல்விதான்! எடப்பாடியை எச்சரிக்கும் ஓ.பி.எஸ்!

அதிமுகவை பலப்படுத்த அமமுக இணைப்பதும் சசிகலாவை இணைப்பதும் தான் ஒரே வழி என ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஒன்றாக நினைக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்பவும் பண்ண தப்ப உணரலைனா அடுத்த முறையும் தோல்விதான்! எடப்பாடியை எச்சரிக்கும் ஓ.பி.எஸ்!

அதிமுகவை பலப்படுத்த அமமுக இணைப்பதும் சசிகலாவை இணைப்பதும் தான் ஒரே வழி என ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஒன்றாக நினைக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுகவில் குழப்பம் நீட்டித்து வருகிறது. அவருக்கு பின் கட்சியை நடத்த யாருக்கும் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒரு தலைமை சென்று, இரண்டு தலைமை வந்தது. தற்போது இரண்டு தலைமையில் சரியான உடன்பாடு இல்லாததால் அவர்களுக்குள்ளும் புகைந்து வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கிடையே அதிமுகவை முழுமையாக கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை கைப்பற்றி ஒருங்கிணைக்க நினைக்கும் சசிகலா,  இந்த இருவருக்கும் இடையே ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் ஓ.பன்னீர். ஆனால் இவரின் ஆதரவு சசிகலாவிற்கு தான் இருக்கும் என்கிறார்கள் அதிமுக மூத்த தொண்டர்கள். 


மேலும் தேனியில் ஓ. பி.எஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் கட்சிக்குள் இணைத்திருந்தால் அதிமுகதான் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தன் பேச்சை எடப்பாடி கேட்கவில்லை என அவர் பேசியதாக கூறப்படுகிறது.


இதனால் அதிமுகவில் சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைய ஓ. பி.எஸ் பச்சை கொடிதான் காட்டுகின்றார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு எடப்பாடி தரப் பினர் தரும் ரியாக்‌ஷனை சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..