14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால்...ஏலத்தில் விடப்படும்...போலீசார் எச்சரிக்கை!

14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால்...ஏலத்தில் விடப்படும்...போலீசார் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்:

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. 

பலமடங்கான அபராத தொகை:

இதில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசி வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓடுவது என எல்லாவற்றுக்கும் அபராத தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

காவல்துறையை ஏமாற்றும் வாகன ஓட்டிகள்:

இதன்படி வாகனம் ஓட்டுவதில் விதி மீறுபவர்களிடம் கடந்த வாரம் முதல் போக்குவரத்து போலீசார் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால், பல வாகன ஓட்டிகள் காவல்துறையினர் விதிக்கும் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். 

எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து போலீசார்:

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர். அப்படி நீதிமன்றம்  வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com