”தாய்நாடு காக்க வேண்டுமென்றால் செங்குருதி சிந்துவது எங்களுக்கு வெல்லமடா.  தோளோடு தோள் நின்று நான் வாளை சுழற்றினால் இந்த வையகம் நடுங்குமடா”

”தாய்நாடு காக்க வேண்டுமென்றால் செங்குருதி சிந்துவது எங்களுக்கு வெல்லமடா.  தோளோடு தோள் நின்று நான் வாளை சுழற்றினால் இந்த வையகம் நடுங்குமடா”

இதுவரை தீக்குவியல்களின் கீழ் உயிருடன் இருந்த போர் மற்றும் படுகொலைகளின் நெருப்பு, இப்போது தீயாக எரிகிறது. ஆனால் தொப்பி அணிந்தவர்களின் தேசம் தங்கள் பீரங்கிகளையும், சிப்பய்களையும் ஒழுங்குடனும் வேகத்துடனும் செயல்படுத்துகின்றனர். முடிவில்லா பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களின் இடைவிடாத மழை தொடங்கியது, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  குழப்பம் ஏற்பட்டது;  போரில் இருந்தவர்கள் தொடர்ச்சியான இடியால் காது கேட்க முடியாதவர்களாய் மாறினர், மேலும் முடிவில்லா ஒளியில் அவர்களின் கண் பார்வை மங்கிவிட்டது.

ஒப்பந்தங்கள் மூலமாக இடங்களை பெற்று வணிகம் செய்து வந்த ஆங்கிலேய வணிகர்கள் சலுகைகளை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துவது பிடிக்காதபோது போர் நடந்தது. மேலும், நிறுவனத்தின் தொழிலாளர்கள் வரி செலுத்துவதை நிறுத்தியதும் மன்னர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி போருக்கு வழி வகுத்தது.

மேலும் படிக்க: வணிகம் முதல் காலனித்துவம் வரை........!!!!!

இயற்கையும் சதி செய்தது:

வணிகர்கள் வரி செலுத்த மறுத்ததைத் தொடர்ந்து வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயர்களின் எதிரிகளான பிரெஞ்சுக்காரர்கள் உதவியுடன் போரைத் தொடங்கினார்.  போர் நவாப்பிற்கு சாதகமாக இருந்தபோது மழை பெய்து பெரிய சதி செய்தது.  ஆம், முன்னேற்பாடற்று வந்திருந்த நவாப்- பிரெஞ்சு கூட்டுப்படையின் வெடிகுண்டு பொடிகள் மழையில் நனைந்தன.  ஆங்கிலேயரோ அனைத்தையும் பாதுகாக்க சீலைகளைக் கொண்டு மூடி பாதுகாத்தனர்.  நவாப் படை பின்வாங்கியது.  ஆங்கிலேயர் எளிதாக வெற்றியும் பெற்றனர்.  1757 ஜூன் 23ல் நடைப்பெற்ற இந்த பிளாசிப் போர் ஆங்கிலேயரின் வலுவான ஆதிக்கத்திற்கு மிகப்பெரும் படிக்கல்லாக இருந்தது.

மேலும் படிக்க: ”சூரியன் அஸ்தமிக்காத பரந்த பேரரசு, அதன் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை."

தற்கொலையும் நாடு கடத்தலும்:

1757 இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் வெற்றியடைந்த கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது.  வங்காளத்தின் நவாப் மீர் காசிமைத் தங்கள் கைப்பாவையாக்க முயன்றனர். ஆனால் மீர் காசிம் அவர்களது கம்பனி அதிகாரிகளின் கட்டளைகளை மீறி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினார்.  இதனால் 1763 இல் கிழக்கிந்திய நிறுவனம் அவரைப் பதவியிலிருந்து விரட்டியடித்தது.  முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், மீர் காசிம், நவாப் சுஜா உத்-தவுலா ஆகியோர் இணைந்து ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளத்தின் மீது படையெடுத்தனர்.

மேலும் படிக்க:  "ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”

 

அக்டோபர் 23, 1764 இல் இரு தரப்புப் படைகளும் கங்கையாற்றுக் கரையில் பக்சார் எனுமிடத்தில் சந்தித்தன. ஒருங்கிணைக்கப்படாத இந்திய ஆட்சியாளர்களிடையே ஒற்றுமையில்லாததால் அவர்களது படைகள் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனால்  கிழக்கிந்தியக் கம்பனிப் படை  இந்தியப் படையை எளிதில் தோற்கடித்தது. போர்க்களத்தை விட்டு தனது கருவூலத்துடன் தப்பியோடிய மீர் காசிம் பின்பு தற்கொலை செய்து கொண்டார்.  மொகலாயப் பேரரசர் நாடு கடத்தப்பட்டார்.

தென் பகுதிகளிலிருந்து எதிர்ப்புகள்:

சமாதானம், உடன்படிக்கை, பணிந்து போவது இவற்றையெல்லாம் யாரிடம் சொல்ல வந்தாய்.  தாய்நாடு காக்க வேண்டுமென்றால் செங்குருதி சிந்துவது எங்களுக்கு வெல்லமடா.  தோளோடு தோள் நின்று நான் வாளை சுழற்றினால் இந்த வையகம் நடுங்குமடா.  இந்த வேலுநாச்சியரிடமா கேட்கிறாய் உடன்படிக்கை.  உன் கூட்டாளிகளின் தோட்டாக்கள் வருவதற்கு முன் என் வாள் உன் உயிரைப் பறித்து விடும்.  போர் முடிந்த பிறகு என் காலில் விழுந்து கேளுங்கள்.  உடன்படிக்கை செய்து கொள்கிறேன்.

காளையார்கோயிலில் கணவர் இறந்த செய்தி கேட்ட வேலுநாச்சியார் நிலைகுலைந்தார்.  நிச்சயம் சிவகங்கையை மீட்டெடுப்பேன் என்ற உறுதியோடு தக்க சமயத்திற்காக காத்திருந்தார்.  1780ல் அதற்கான காலமும் வந்தது.  விஜய தசமி நாளில் குயிலின் உயிர்த்தியாகத்தோடு ஹைதர் அலியின் படை உதவியோடு கணவன் இழந்த பகுதியை மீட்டெடுத்தார் வீரமங்கை வேலுநாச்சியார்.  இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியாரே.  ஆனால் அவரது சிறப்புகள் மறைக்கப்பட்டு வட இந்தியாவின் ஜான்சி ராணி போற்றப்படுவதோடு தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என வேலு நாச்சியார் அழைக்கப்படுவது மிகவும் அபத்தமானது.  வட இந்தியாவின் வேலுநாச்சியார் ஜான்சி ராணி என மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மருது சகோதரர்களால் தென்னிந்திய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  மருது சகோதரர்களுக்கு முன்பு ஆங்கிலேயரை எதிர்த்த தமிழர் பூலித் தேவர் ஆவார்.  ஆனால் அவரும் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.  தென்னிந்திய கூட்டமைப்பில் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரை இணைத்துக் கொண்டார்.  ஆங்கிலேயருக்கு எதிரான பல நாயக்கர்களும் அவர்களை இதில் இணைத்துக் கொண்டனர்.  1801ல் தென்னிந்திய புரட்சி வெடித்தது.  வீரம் மனத்தைரியம் கொண்ட தமிழ் வீரர்களிடம் பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் இல்லை.  இருப்பினும் எளிதாக வீழ்ந்துவிடவில்லை தமிழர்கள்.  கடைசி வரை போராடினர்.  இறுதியாக சதியால் வீழ்த்தப்பட்டனர்.  தென்னிந்தியப் புரட்சி ஒடுக்கப்பட்டது.  கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டனர்.

முதல் இந்திய சுதந்திரப் போர் நமது தமிழகத்தில் வேலூர் கோட்டையில் தொடங்கியது.   வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களும் ஹைதர் அலியின் மகன்களும் 1806ல் தக்க சமயம் காத்திருந்து ஹைதர் அலியின் மகளின் திருமணத்தன்று கலகத்தைத் தொடங்கினர்.  துரோகத்தால் முடிக்கப்பட்டது முதல் இந்திய சுதந்திர போர்.  ஆம் கூட்டத்தில் இருந்த கருப்பு ஆடு ஒன்று பணத்தைப் பெற்று அனைத்து தகவலையும் விற்று விட்டான்.  போர் முடிக்கப்பட்டாலும் விதைக்கப்பட்ட விதை விருட்சமாக வளரத் தொடங்கியது.

மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தொடர்ச்சியாக ஆங்கிலேயரை எதிர்த்து வந்தார்.  1700களிலேயே ராக்கெட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியவர் திப்பு சுல்தான்.  அவர் இறக்கும் வரை தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்ததோடு அவர்களை வெற்றியும் கொண்டார்.   திப்பு சுல்தான் அவருக்கு துரோகம் இழைத்தவர்களைக் குறித்து “நாங்கள் அதிவேகமாகச் சென்றோம், ஒரே நேரத்தில், 40,000 தேசத்துரோகத்தைத் தூண்டுபவர்களை கைதிகளாக ஆக்கினோம் , அவர்கள் எங்கள் வெற்றிகரமான இராணுவத்தின் அணுகலைக் கண்டு பீதியடைந்து, காடுகளுக்குள் பதுங்கி, உயரமான மலைகளில் தங்களை மறைத்துக்கொண்டனர். அவர்களையும் கைது செய்து அனைவருக்கும் பயங்கரமான தண்டனைகள் வழங்கப்பட்டது.”

மேலும் தென் பகுதிகளிலிருந்த பிற ஆட்சியாளர்கள் கர்நாடக போர்கள் மூலமும் மராத்தா போர்கள் மூலமும் ஆங்கிலேயரை எதிர்த்து வந்தனர்.  ஆனால் ஆங்கிலேயரின் நவீன தொழில்நுட்பங்களால் வெற்றி பெற முடிந்தது.  ”இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலியோ மிகக் குறைவு”  எனப் பேசிய ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரர்களின் வீரதீர செயல்பாடுகளை அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: ராகுலின் பாத யாத்திரையை திசை திருப்ப முயல்கிறதா பாஜக..!!!