டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக அஸ்வின் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்...

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக தமிழக வீரர் அஸ்வின் காரணமாக இருக்கலாம் என இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து  விராட் கோலி விலக அஸ்வின் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்...

கிரிக்கெட் அடிக்டர் வெப்தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியின்படி, இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர், கேப்டன் விராட் கோலி தன்னை இந்திய அணியில் பாதுகாப்பற்றதாக உணர வைத்திருப்பதாக அவர் குறித்து பிசிசிஐ செயலாளரிடம் புகார் தெரிவித்திருப்பதாக ஐஏஎன்எஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே பிரச்னை வெடித்ததாகவும், இது குறித்து அஸ்வின், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக நேரிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிய போது, போதிய உத்வேகத்துடன் விளையாடவில்லை என்னை கடிந்துகொண்டதாக அந்த மூத்த வீரர் விராட் கோலி குறித்து புகார் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.



அதே நேரத்தில் விராட் கோலி குறித்து புகார் கூறிய அந்த மூத்த வீரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் என தகவல்கள் அடிபடுகின்றன.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பின்னர் இங்கிலாந்துடன் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்ட நிலையில் இந்த செய்தி சீரியசாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.



எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் கோலி, அஸ்வினுக்கு பதிலாக யுவேந்திர சாஹலை சேர்த்துக் கொள்ளவே ஆசைப்பட்டார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மைதனங்களில் நல்ல முறையில் பந்துவீசி வருவதாகவும் இதனால் இந்த டி20 உலககோப்பை தொடருக்கு அவரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்புகளை தேடி தரும் என துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியதை அடுத்து அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.