"இது வெறும் ட்ரெய்லர் தான்” பாஜகவிற்கு சவால் விட்ட எதிர்க்கட்சிகள்!!!

"இது வெறும் ட்ரெய்லர் தான்” பாஜகவிற்கு சவால் விட்ட எதிர்க்கட்சிகள்!!!

ஹரியானாவில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தியுள்ளன.  2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதில் மிகவும் உறுதியாகவும் உள்ளன.  இதுவரையில் எந்தெந்தக் கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசியுள்ளன.  தற்போதைய நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். 

ஹரியானாவில் இணைந்த கைகள்:

பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. அதன் தனிச்சிறப்பு நேற்று ஹரியானாவில் வெளிப்பட்டுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் இங்குள்ள ஃபதேஹாபாத்தில் மறைந்த முன்னாள் துணைப் பிரதமர்  சவுத்ரி தேவி லாலின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு சம்மன் திவாஸில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. 

இந்த பேரணியில்தேசிய லோக் தளம் உடனான ஐக்கிய கூட்டணியின் ஒரு தனித்துவம் காணப்பட்டது. எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலர் ஒரே மேடையில் தோன்றி ”இது வெறும் டிரெய்லர் மட்டும் தான்” என்று பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளன.
 
பேரணி குறித்து:

ஃபதேபாத்தில் நடந்த பேரணிக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பீகார் முதலமைச்சரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார், ஆர்ஜேடி தலைவரும், பீகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், என்சிபி தலைவர் சரத் பவார், சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா (உத்தவ் பிரிவு) அரவிந்த் சாவந்த் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அனைவரும் வெளிப்படையாக பாஜக அரசை தாக்கி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அறிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, டிஆர்எஸ் கட்சியின் கே சந்திரசேகர் ராவ், தேசிய மாநாட்டின் தலைவர் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் எம்பி ஹனுமான் பெனிவால், மேகாலயா ஆளுநர் சத்பால் மாலிக், மத்திய முன்னாள் அமைச்சர் பிரேந்தர் சிங், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பேரணியில் பங்கேற்கவில்லை. மோசமான வானிலை காரணமாக இவர்கள் பேரணியில் பங்கேற்க முடியவில்லை எனக் காரணம் கூறப்பட்டது. 

மேலும் தெரிந்துகொள்க:  எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையாத ஜெகன்மோகன், நவீன், மாயாவதி!!! காரணம் என்ன??

நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அல்ல:

பேரணியில் உரையாற்றிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இது மூன்றாவது அணி அல்ல, இது முதல் அணி என்று கூறினார். ”நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம், அப்போதுதான் வலிமையாக இருப்போம். நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன். கடந்த தேர்தலின் போது எங்கள் வேட்பாளர்களை தோற்கடிக்க பாஜக முயற்சித்தது” என்று கூறியுள்ளார் நிதீஷ் குமார்.

மேலும் ”பின்தங்கிய மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பீகாரில் இன்று ஏழு கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. 2024 தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் நிச்சயம் ஒன்று சேர வேண்டும்” என்றும் பேசியுள்ளார். அதனுடன் “ 2024,மக்களவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்.  இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சண்டை இல்லை.  பாஜக கலவரத்தை உருவாக்க  விரும்புகிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க: எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் நிதிஷா???ஆதரவு பெருகி வரும் நிதிஷ்குமார்!!!!

இப்போது என்டிஏ இல்லை:

பீகார் துணை முதலமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ”இன்று நாட்டில் நிலவும் சூழ்நிலை யாருக்கும் மறைக்கப்படவில்லை. அவர்கள் நாட்டில் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பாஜக, அவர்களின் சில கூட்டாளிகளை மட்டுமே விரும்புகிறார்கள்.  உழவர் இயக்கம் நடத்தி சங்கிகளுக்கு பாடம் புகட்டும் பணியை விவசாயிகள் சிறப்பாக செய்ததற்கு நன்றி சொல்ல வந்துள்ளேன். இப்போது பாஜக கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், ஜே.டி.(யு) போன்றவை ஜனநாயகத்தை காப்பாற்ற அதை கைவிட்டன.

ஆட்சி மாற்றத்திற்கான நேரம்:

என்சிபி தலைவர் சரத் பவார் பேரணியில் பேசுகையில்,  ”டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  ஆனால் நீண்ட காலமாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. விவசாயிகள் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக உறுதியளித்த அரசு அதை நிறைவேற்றவில்லை” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “ 2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் அனைவரும் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  நமது விவசாயிகளும் இளைஞர்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.” என்றும் பேசியுள்ளார் சரத் பவார்.

நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்:

சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “சிவசேனா மற்றும் ஜே.டி.(யு) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்ததால், அவர்களுடன் இணைந்துள்ள கட்சிதான் உண்மையான தேசிய ஜனநாயகக் கூட்டணி” என்று கூறியுள்ளார். மேலும் “ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என்ற கொடியின் கீழ் ஒன்றிணைந்து அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டிய நேரம் இது” என்றும் அவர் கூறியுள்ளார். 

கூட்டணி கட்சிகள்:

”இன்றைய பேரணியைப் பார்த்தால் கூட்டணி எவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளன. மம்தா பானர்ஜி, கே.சி.ஆர் ஆகியோர் தலைமை குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. மறுபுறம், காங்கிரஸால் முடிவெடுக்க முடியாததால் தி.மு.க., போன்ற சில கட்சிகளும் குழப்பத்தில் உள்ளன.” என மூத்த பத்திரிக்கையாளர் பிரமோத் குமார் கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க:   பிரதமர் தேர்தல் நான்முனை போட்டியா?

மேலும் கூறுகையில், ”இன்றைய நிலவரப்படி, ஆர்ஜேடி, எஸ்பி, ஐஎன்எல்டி, சிபிஐ(எம்), என்சிபி, சிவசேனா (உத்தவ் பிரிவு), தேசிய மாநாடு, சமாஜ்வாதி கட்சி, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளை ஒன்றிணைப்பதில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது. ” என்றும் தெரிவித்துள்ளார்.

சில கட்சிகள் தேர்தலுக்கு முன் நிச்சயமாக இணையலாம்.  ஆனால் பெரிய கட்சிகளுக்குள் ஈகோ மோதல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், 2024ல், பல கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிடவும், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பா.ஜ.க,வை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.” எனவும் கூறியுள்ளார் பிரமோத்.

இதையும் படிக்க: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான விலை ராஜஸ்தானா?? ராஜஸ்தானிலும் ஆட்சியை இழக்குமா காங்கிரஸ்!!!