அமமுகவை இருட்டடிப்பு செய்யும் ஜெயா டிவி.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

அமமுகவை இருட்டடிப்பு செய்யும் ஜெயா டிவி.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை விட குறைவான ஓட்டுகளையே அமமுக பெற்றது. தேர்தல் சமயத்தில் அமமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு தினகரன் பணம் தராததும் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,தமிழக மக்களிடம் அமமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்று தினகரனிடம் சொல்லிய சசிகலா, அமமுகவை கலைத்து விடு என்று உத்தரவிட்டுள்ளார்.  

ஆனால் இதை கேட்காமல் அமமுகவை கலைக்க முடியாது, தனியாக நின்றேனும் கட்சியை  நடத்துவேன் என தினகரன் கூறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த சசிகலா இனிமேல் என்னை பார்க்க வராதே என்று தினகரனிடம் கூறியதுடன், அமமுக என்ற வார்த்தையையே தொண்டர்களிடம் பேசியபோது சசிகலா கூறவில்லை. 

மேலும், தற்போது ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஏற்றிருக்கும் சசிகலா. அமமுக பற்றியோ! தினகரன் பற்றியோ செய்திகளை வெளியிட தடை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அமமுகவிலிருந்து பழனியப்பன் உள்ளிட்ட பலர் கூட்டம் கூட்டமாக தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். சிலர், திமுகவில் சேர்க்கிறார்கள். பலர் அதிமுகவில் சேர்க்கிறார்கள்.  

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. தினகரனும் அங்கு வருவதில்லை. அமமுகவிலிருந்து பல நிர்வாகிகள் வெளியேறுகிறார்களே என அமமுகவை சேர்ந்த பலர் தினகரனிடம் வருத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் இதைப் பற்றி கவலைப் படாத தினகரன், யார் வேண்டுமானாலும் கட்சியை விட்டு போங்கள், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை என்று விட்டேத்தியாக பதில் கூறியுள்ளார் . அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்து எது பற்றியும் கருது தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கும் தினகரன் பத்திரிகையாளர்களையும் சந்திக்க மறுத்து வருகிறார். இதனால் அமமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.