அவர் ஒரு கம்யூனிஸ்ட்...அவருக்கு பயமே இல்லையாம்...!

அவர் ஒரு கம்யூனிஸ்ட்...அவருக்கு பயமே இல்லையாம்...!
Published on
Updated on
1 min read

திரையில் மாஸாக சண்டை காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு, தங்கள் உயிரை பணயம் வைத்து நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து நல்லப்பெயர் வாங்கி கொடுப்பது இந்த ஸ்டண்ட் கலைஞர்கள்  தான். அப்படி இந்திய சினிமாவில் நீண்ட காலமாக பிரபல ஸ்டண்ட் இயக்குனராக  பணியாற்றியவர் தான் இந்த ஜூடோ ரத்னம்.  

இவர் ஒரு கம்யூனிஸ்ட் :

பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி சினிமாத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராக தனக்கான ஒரு இடத்தை பிடித்த இவர், ஒரு கம்யூனிஸ்ட் என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அட ஆமாங்க, பொதுவுடைமை கொள்கைகளால் அரசியலில் ஈர்க்கப்பட்ட ஜூடோ ரத்னம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஜூடோ, இறுதிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மறக்காமல் வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. 

ஜூடோ மறைவு :

இப்படி கலைத்துறையில் கின்னஸ் சாதனை படைத்து, அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் இருந்து மாறாமல் தனது உறுப்பினர் பதவியை சிறப்பாக செய்து வந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

பயம் என்பது கிடையாது:

இந்நிலையில் இவரது உடலுக்கு பல்வேறு திரைப்பலங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அதில் கம்யூனிஸ்ட் தரப்பில் அஞ்சலி செலுத்துவபவர்கள், ஜீரோ என்ற அமைப்பை சண்டை காட்சியில் அறிமுகப்படுத்தியதன் காரணமாகவே இவருக்கு ”ஜூடோ ரத்னம்” என்ற பெயர் வந்ததாகவும், எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மறவாதவர், தனது இறுதி மூச்சு வரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வாழ்ந்தவருக்கு பயம் என்பது துளியும் கிடையாது, எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்வார் என்றும் கூறி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com