சிதம்பரம் நடராசர் கோயில்; தொடரும் கனகசபை சர்ச்சை!

சிதம்பரம் நடராசர் கோயில்; தொடரும் கனகசபை சர்ச்சை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய கூடாது என்று தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை காவல்துறை துணையோடு அறநிலையத்துறை அகற்றியுள்ளது. ஆனாலும் இந்த சர்ச்சை முடிந்த பாடில்லை. 

2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கை ஒட்டி உலகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததும் குறைந்ததுமாக இரண்டாண்டுகள் கழிந்த பிறகே வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.

அப்போது சிதம்பரம் நடராசர் கோயிலும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இருந்தது. ஆனால் புதியதாக ஒரு சிக்கலும் உருவானது. சிற்றம்பல மேடை என்று அழைக்கப்படும் கனகசபை மீது ஏறி பொது மக்கள் தரிசனம் செய்யலாமா? வேண்டாமா? என்பதே அந்த சர்ச்சை. இது முதலில் தீட்சிதர்களின் உட்கட்சி பூசலாகத்தான் இருந்தது. தீட்சிதர்களின் ஒரு தரப்பு "பொது மக்கள் சிற்றம்பல மேடை மீது ஏறி மக்கள் வழிபாடு நடத்துவது காலங்காலமாக இருந்து வந்தது என்பதால் அது தொடர வேண்டும்" என்றும் மறுபுறம், இன்னொரு தரப்பு "ஊரடங்கின் போது பின்பற்ற பட்டது போல கனக சபை மீது மக்கள் ஏறி தரிசனம் செய்ய தடை விதிக்க வேண்டும்" என்றும் கட்சிக்கட்டினர்.சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?

அப்போது சக்திகணேஷ் என்ற தீட்சிதர் கனசபை மீது ஏறச் சென்றபோது அவரை எதிர்தரப்பு தீட்சிதர்கள் தாக்கி கீழே இறக்கினர். அப்போதெல்லாம் இதுகோயில் நிர்வாகத்தினரை தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போதுதான் சர்ச்சை வெடிக்க தொடங்கியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜெயசீலா என்ற பெண் பக்தர் ஒருவர் சிற்றம்பல மேடை மீது ஏறி வழிபட முயன்றார். அப்போது அவரை தாக்கிய தீட்சிதர்களின் ஒரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவும் படுத்தினர். உடனே இந்த சர்ச்சை பூதாகரமாக வடிவமெடுத்தது. பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெய்வ தமிழ் பேரவை என பல்வேறு இயக்கங்கள் நடராசர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக வரிந்து கட்டி நின்றன. இவை போதாதென்று சைவ குருமார்களும் இவர்களோடு இணைந்து கொண்டனர். நாளுக்கொரு போராட்டம், பொழுதுக்கொரு ஆர்பாட்டம் என நடராசர் கோயிலை சுற்றி இருந்த தெருக்கள் அரசியல் போர்க்களமாயின. அதேநேரத்தில் இது தொடர்பாக கோர்ட்டை கோதாவாக மாற்றி களமிறங்கியது இந்து சமய அறநிலையத்துறை.  சக்திகணேஷ்

இந்து அறநிலையதுறை சார்பில் இந்த விவாரத்தில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஓராண்டு காலம் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சர்ச்சை கடந்த 17ஆம்தேதி மீண்டும் விழித்துக்கொண்டது. ஆனி திருமஞ்சனம் விழாவை ஒட்டி, சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடந்து வருவதால் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் தீட்சிதர்களின் ஒரு தரப்பு பதாகை வைத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் தீட்சிதர்களின் இன்னொரு தரப்பை சேர்ந்த தட்சன் என்பவர் இதனை எதிர்த்து இந்துசமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்தார். இதனையொட்டி நடவடிக்கையில் இறங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் கனகசபை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுக்கும் அறிவிப்பு பதாகையை அரசுடன் ஆலோசிக்காமல் வைத்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தினர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை செயல் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அறநிலையத்துறையின்  செயல் அலுவலர், அரசின் உத்தரவை மீறி வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை நீக்க சென்ற தன்னை பணி செய்ய விடாமல் தடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் வந்து சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றினர். சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை: அறிவிப்பு பலகை அகற்றம்!

பதாகையை அகற்றினாலும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சிவபக்தர்கள் சிலர் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அப்போது பக்தர்களுக்கு எதிராக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதுவரை இந்த சர்ச்சையில் ஈடுபடாமல் இருந்த பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தற்போது புதியதாக களமிறங்கியுள்ளன. 

சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அது அதன் வரலாற்றினூடே இரண்டர கலந்தது. சைவ, சமண சமயங்களுக்கிடையிலான போட்டியில், சைவ சமய குருமார்களில் மூலவராக கருதப்படும்  அப்பர் என்கிற திருநாவுக்கரசர் இறைவனடி சேர்ந்ததில் தொடங்கிய இந்த சர்ச்சை படலம், நந்தனார் தீயில் இறங்கி தன்னை தூய்மை படுத்திக்கொண்டது, அவர் நுழைந்ததாக கூறப்படும் வாசல் இன்றளவும் மூடிக்கிடப்பது, சைவம் மற்றும் வைணவ மதத்திற்கு எதிரான மோதல்கள் தொடர்ந்து வந்துள்ளது.  நவீன காலத்தில் இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டிய கோரிக்கைகள், தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என எழுந்த கோரிக்கைகள் என சில குறிப்பிட்ட சர்ச்சைகள் மட்டுமே சூழ்ந்திருந்தன. 

ஆனால் இப்போது நடந்து வரும் சர்ச்சைகளும் அதில் பங்குபெறும் தரப்பினரும் ஒரு புதிய தடத்தில் கோயில் நிர்வாகம் பயணிப்பதாக தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. முன்னதாக சிறுமி ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தாக சில மாதங்களுக்கு முன்னர் இரு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இதே பிரச்சினையில் அச்சிறுமிக்கு கன்னித்தன்மையை சோதிக்க இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் மாநில அரசின் மீது குற்றம் சாட்டினார். இதனையொட்டி இந்த சர்ச்சை மேலும் பூதாகரமாக மாறியுள்ளது. ஆனால் இந்த சர்ச்சையே இந்த இன்னும் தீராத நிலையில் மீண்டும் கனகசபை பிரச்சினை எழுந்ததும் அதில் தீட்சிதர்களின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக சங்பரிவார அமைப்புகள் இருப்பதும் இந்த பிரச்சினைகளை மேலும் தீவிர படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் விளக்கம் !!!!

-ச.பிரபாகரன்

இதையும் படிக்க:சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை: அறிவிப்பு பலகை அகற்றம்!