’ஆஸ்ட்ரா ஹிந்த்’ பற்றி தெரிந்து கொள்ளலாம்...!!!

’ஆஸ்ட்ரா ஹிந்த்’ பற்றி தெரிந்து கொள்ளலாம்...!!!

கூட்டு ராணுவப் பயிற்சி நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து ராணுவ அமைப்புகள் பங்கேற்கும் முதல் பயிற்சி என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ராணுவ பயிற்சி:

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ராணுவங்களுக்கு இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது.  இந்த ராணுவ பயிற்சிக்கு 'ஆஸ்ட்ரா ஹிந்த்-22' என பெயரிடப்பட்டுள்ளது. 

ராணுவ அறிக்கை:

ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராஜஸ்தானில் உள்ள மஹாராஜ் ஃபீல்டு ஃபையரிங் ரேஞ்சில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது நேர்மறையான இராணுவ  உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு இயங்கும் தன்மையை அடிப்படையாக கொண்டது என கூறப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரா ஹிந்த்:

பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் படி, ஆஸ்ட்ரா ஹிந்த் ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும் எனவும் இது இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் படைகள் கூட்டுத் திட்டமிடல், கூட்டு ராணுவ பயிற்சிகள் நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் எனவும் இந்த கூட்டுப் பயிற்சியானது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு படைகளுக்கும் இடையே புரிந்துணர்வு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் கூறியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   யார் இந்த எல் சிசி...மோடிக்கும் அவருக்குமான ஒற்றுமை என்ன?!!