கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக...பாதியில் வெளிநடப்பு செய்தது ஏன்?

கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக...பாதியில் வெளிநடப்பு செய்தது ஏன்?

பேரவையில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3 ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இரங்கல் குறிப்புடன் தொடங்கிய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கருப்பு சட்டை அணிந்து வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதாகவும், திமுக கூட்டத்தில் பாதுகாப்புக்காக வந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். ஆனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

மு.க.ஸ்டாலின் பதில்:

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உரிய நடைமுறையை பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்து பட்டியல் உள்ளதாகவும், பெண் காவலரின் பாலியல் தொல்லை  குறித்து கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கடுக்காய் தொழிற்சாலை கேட்ட எம்.எல்.ஏ...மிடுக்காய் பதில் அளித்த அமைச்சர்!

வெளிநடப்பு செய்த அதிமுகவினர்:

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், தமிழகத்தில் முற்றிலுமாக சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தினம் தினம் கொலை, கொள்ளை, வழிப்பறி என்ற செய்திகள் தான் வருகின்றன. இப்படி தினமும் நாளிதழ்களில் வந்த செய்திகளைத்தான் பேரவையில் சுட்டிக்காட்டினேன். 

விசாரணைக்கு பிறகே நடவடிக்கை:

அதேபோல், விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் காவலருக்கு திமுகவை சேர்ந்த 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் வழக்கு பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விசாரணை நடத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி கூறுகிறார்.

போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு:

அதேபோன்று தமிழகத்தில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிகமாகி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதனைப் பற்றி அவையில் பேச அனுமதிக்கவில்லை.  சட்டம் - ஒழுங்கை கண்டித்து தான் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 

நடுநிலையோடு் செயல்படவில்லை:

தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகர் நடுநிலையோடு் செயல்படவில்லை என்றும், ஒருவேளை பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் சபாநாகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் ஈபிஎஸ்  குற்றம் சாட்டினார்.