கேரளாவிலும் மாஸ் காட்டிய பொக்கை கிழவி... ஸ்டாலினை பாராட்டி தள்ளும் மலையாள ஊடகங்கள்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி திட்டம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவிலும் மாஸ் காட்டிய பொக்கை கிழவி... ஸ்டாலினை பாராட்டி தள்ளும் மலையாள ஊடகங்கள்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி திட்டம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் 500 ரோப்பாற்கு நோட்டுடன் பொக்கைவாய் கிழவி காசை வாங்கிக்கொண்டு என்ஜாய் பண்ணி சிரிப்பது தமிழத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே வைரல். முதல்வரே தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டது அதைவிட சிறப்பு.

தமிழக அரசு கொரோனா இரண்டாம்கட்ட நிவாரணமாக வழங்கிய ரூ. 2,000, மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பை நேற்று வழங்கப்பட்டது. தமிழக மக்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், அரசு வழங்கிய நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் போட்டோ தற்போது வரை சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. அந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், `இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு' எனக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.  

இதே பாட்டியின் புகைப்படத்தை கேரள ஊடகங்களும் பகிர்ந்து.. தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டி உள்ளன. கேரள பத்திரிக்கை ஒன்றில் பாட்டியின் புகைப்படத்தோடு செய்தி வெளியாகி உள்ளது. அதேபோல் கேரள செய்தி சேனல்களும் பொக்கை வாய் பாட்டியின் சிரிப்பும், முதல்வர் ஸ்டாலினும் திட்டமும் என்ற தலைப்பிலும் இதை பற்றி செய்தி வெளியிட்டு இருக்கிறார். இதேபோன்று தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் தற்போது வைரலாகி வரும் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் கிழவியின் புகைப்படத்தை ஜாக்சன் என்ற நிருபர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.