சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி...மதிப்பை பார்த்து வாய் பிளந்த போட்டியாளர்கள்!!

பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலின் முக்கால்வாசி பங்குகளை விலைக்கு வாங்கி  ஹோட்டல் வணிகத்தில் கால்பதித்த முகேஷ் அம்பானி.

சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி...மதிப்பை பார்த்து வாய் பிளந்த போட்டியாளர்கள்!!

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலின் முக்கால்வாசி பங்குகளை விலைக்கு வாங்கி  ஹோட்டல் வணிகத்தில் கால்பதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்தியாவில் நெட்வொர்க், ஆயில் முதற்கொண்டு பல்வேறு தொழில்துறை வணிகத்தை செய்து முன்னணி வகித்து வரும் முகேஷ் அம்பானி அடுத்ததாக நியூயார்க்கில் உள்ள மாண்ட்ரின் ஓரியண்டல் எனும் ஹோட்டலின் 73.37% பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் சுமார் 98.15 டாலர் மதிப்புக்கொண்ட பங்கின் விலை, இந்திய மதிப்பில் ரூபாய் 729 கோடியாகும்.  கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மாண்ட்ரின் ஓரியண்ட் ஹோட்டல் உலக அளவில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஹோட்டலாக இருந்துவருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு 115 மில்லியனும், கடந்த 2019-ஆம் ஆண்டு 113 மில்லியனும்,  கொரோனா காலத்தில் அதாவது  2020-ஆம் ஆண்டு 15 மில்லியன் வருமானத்தை ஈட்டித்தந்துள்ளது. இதனால்  இந்த ஹோட்டல் எதிர்காலத்தில் கொள்ளை லாபத்தைக் கொடுக்கும் என்பதை கணித்துதான்  அவர் இந்த ஹோட்டலை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், கேமன் தீவில் உள்ள கொலம்பஸ் சென்டர் கார்ப்பரேஷனின் முழு பங்கையும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் முகேஷ் அம்பானி தனது தொழில்துறை வர்த்தகத்தை அமெரிக்காவில் ஆழமாகக் கால்தடம் பதித்து உள்ளார் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.