”எனது மனைவி தான் காரணம்” டாடா சன்ஸ் குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணத்தில் வாக்குமூலம் அளித்த கணவர்!!!

”எனது மனைவி தான் காரணம்”  டாடா சன்ஸ் குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணத்தில் வாக்குமூலம் அளித்த கணவர்!!!

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர் சைரஸ் மிஸ்திரி.  இவர் மகாராஷ்டிராவின் பால்கரில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு பென்ஸ் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.

சடோட்டி அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்திரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

மேலும் தெரிந்துகொள்க:    டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் மரணம்!!!!

மேலும், விபத்துக்குள்ளான காரையும் போலீசார் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வாக்குமூலம் அளித்த டேரியல் பண்டோல்:

இந்நிலையில், கார் ஓட்டி வந்தவர் டாக்டர் அனாஹிதா என்பது தெரிய வந்தது.  தற்போது அவர்களுடன் சென்ற அனாஹிதாவின் கணவர் டேரியல் பண்டோல் முழுவதுமாக குணமடைந்து போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

”எனது மனைவி காரை ஓட்டிக் கொண்டு சென்றார்.  எதிரே டிரக் ஒன்றைக் கண்ட அவர் பதற்றமாகி காரை வேகமாக திருப்பும் போது டிவைடரில் இடித்து கார் விபத்துக்குள்ளாகியது.” எனத் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    விஸ்வரூபம் பாணியில் ஜமேஷா முபின்..! கோவை கார் வெடி விபத்தில் வெளியான தகவல்..!