அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ... அழிக்கவும் விடமாட்டேன்.. சசிகலா ஆவேசப் பேச்சு...

என் உயிர் உள்ளவரை அதிமுக கட்சியை யாராலும் கலைக்க முடியாது கலைக்கவும் நான் விட மாட்டேன் சசிகலா என்று சசிகலா பேசியுள்ளார்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ... அழிக்கவும் விடமாட்டேன்.. சசிகலா ஆவேசப் பேச்சு...
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியபிறகு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பிறகு, மாவட்டந்தோறும் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசியே ஆடியோக்களையும் வெளியுட்டு அதிமுக தலைமைக்கு கலக்கத்தை உண்டாக்கி வருகிறார்.  தான் பேசும் ஒவ்வொருவரிடமும் நான் வருவேன்.. நிச்சயம் வருவேன்.. என்று உறுதியளித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நான் வந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும், என்னால் மட்டும்தான் அம்மா ஆட்சியை கொண்டுவர முடியும் என்கிற ரீதியில் பேசி வருகிறார். அவருடன் பேசும் அதிமுகவினரும் நீங்க வந்ததா தான்மா சரியாக இருக்கும் என்று கண்ணீர்விட்டு கதறுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை யூசூப், மயிலாடுதுறையை சேர்ந்த சுமதி, கோவில்பட்டியை சேர்ந்த செண்பகராமன், வந்தவாசி மனோகரன், திருச்சி செல்லப்பன், திருவள்ளூர் ராஜேஸ்வரி, திருத்தணி முருகன், சென்னை சேர்ந்த ஹேமாமாலினி,கோயம்புத்தூர் சேர்ந்த மணிவேல்,மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட தொண்டர்களிடம் சசிகலா இன்று தொலைபேசி வாயிலாக பேசினார்.
 
கோயம்புத்தூர் மணிவேல் சசிகலாவிடம் பேசியுள்ளார். அந்த ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது:
 
2014 ஆம் ஆண்டில் நீங்களும் அம்மா அவர்களும் சேர்ந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றியாக மாற்றி விட்டார் எடப்பாடி 138 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தோம். அதை 65 ஆக மாற்றி சாதனை படுத்தியுள்ளார் எடப்பாடி மற்றும் ஒரு சாதனையை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். அது என்னவென்றால் இரட்டை அலை சின்னத்தையும் அதிமுக கட்சியையும் காணாமல் போக வைக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசிய மணிவேலுக்கு பதில் அளித்த சசிகலா,
 
என் உயிர் உள்ளவரை அதிமுகவை அழிக்க முடியாது. அந்த வேலையை யாராலும் செய்ய முடியாது. செய்யவும் நான் விடமாட்டேன். தொண்டர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கும் வரை வெற்றி நமக்கு மட்டும் தான் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.