ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!

ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!

அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மணடல இயக்குநருக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பிளவு:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்த நிலையில், அதிமுகவில் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈ.பி.எஸ், ஓ.பி.,எஸ் இருவரும் எதிரெதிரே நின்று மோதிக்கொண்டனர்.

ஜூலை 11 :

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை கோஷத்தை அடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடைக்கோரி ஓ.பி.எஸ் இரண்டு முறை வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கானது ஈ.பி.எஸ் க்கு சாதமகாம முடிந்தது.  அதன்பின் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஈ.பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை 11 கலவரம்:

ஜுலை 11 ஆம் தேதி ஈ.பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, அன்றைய தினமே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் சட்டஒழுங்கு பேணி காக்கப்படவில்லை என்றுக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதற்கு பிறகு சீலை அகற்றக்கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாவியை ஈ.பி.எஸ்ஸிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

ஓ.பி.எஸ் நீக்கம்:

இதனிடையே அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதிவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும்  ஓ.பி.எஸை நீக்கினார். இதனையடுத்து பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை ஈ.பி.எஸ் நியமித்தார். இன்மேல் திண்டுக்கல் சீனிவாசன் தான் அதிமுக வங்கிக் கணக்குகளை கவனிப்பார் என்றும், அவரை வங்கிக் கணக்குகளை கவனிக்க அனுமதிக்குமாறும் வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் ஈ,பி,எஸ் கடிதம் ஒன்றை எழுதினார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் ம் முறையிட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் கடிதம்:

இந்நிலையில், அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மணடல இயக்குநருக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் 7 வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை ஈ.பி.எஸ் நியமித்துள்ளார் என்றும், பொதுக்குழு தொடர்பான விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவினை அறிவிக்கும்வரை ஆர்பிஐ வங்கிகளுக்கு உரிய வழிக்காட்டுதல்கள் தரப்பட வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின்படி தற்போது வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.