கோடிகளை அமுக்கிய ஓபிஎஸ் தம்பி!! திடுக்கிட வைக்கும் ஆவின் ஊழல்!!

ஆவின் நிறுவனத்தில் ஊழல் செய்த ஓபிஎஸ் தம்பி
கோடிகளை அமுக்கிய ஓபிஎஸ் தம்பி!! திடுக்கிட வைக்கும் ஆவின் ஊழல்!!
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின் போது, தோல்வியை முன்கூட்டியே கணித்ததாலேயே என்னமோ அதிமுகவினர் பதவியை பயன்படுத்தி பல கோடிகளை முடிந்த வரையில் அபேஸ் செய்துள்ளதாக இணையங்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது. 

அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா ஆவின் நிறுவனத்தில் பணியாளர்களை நியமிப்பதில் பல லட்சங்களை சுருட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன. தேனி மாவட்டத்தின் ஆவின் நிறுவனத் தலைவராக உள்ள ஓ.ராஜா, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அவரசம் அவசரமாக அரசு விதிமுறைகளை மீறி ஆவின் நிறுவனத்தில் 600 பணியாளர்களை நியமித்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பம் செய்யாத சிலரை நேரடியாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. 

தேர்தலுக்கு முன்பாக எவ்விந்த முன் அறிப்பாணையும் இல்லாமல் பணிக்காக பணம் கொடுத்தவர்களுக்கு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நாள், தேதியிட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணி வழங்கப்பட்டவர்களிடம் இருந்து தலா ரூ.30லட்சம் முதல் ரூ.55லட்சம் வரை ஆவின் பொது மேலாளர் உட்பட பலர் கறந்துள்ளதாகவும், ஆவின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட ரூ.20கோடியையும் கையாடல் செய்துள்ளதாகவும், ஆவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பெரியகுளம் கோட்டாட்சியரிடம் புகார் அளித்திருக்கின்றனர். 

அதேப்போல தேனி மாவட்ட ஆவினில் கடந்த ஓராண்டாக நியமிக்கப்பட்ட பணி நியமனங்கள் மற்றும் டெண்டர் ஆவணங்கள் மீதான மறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அதனை முறையாக விசாரணை செய்து, முறைகேடாக வழங்கப்பட்ட பணி நியமனங்களை களைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏற்கனவே அதிமுக ஆட்சியின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மீது, ஊழல் புகார்களை அதிகாரப்பூர்வமாக ஆளுநரிடம் ஒப்படைத்து வரும் திமுகவிற்கு இதுபோன்ற புகார்களும் கைக்கொடுத்து வருவதால் அதிமுக நிர்வாகிகளும், தலைமையும் கலக்கத்தில் உள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com