நான் செய்வேன்...அவர் செய்வாரா..? எடப்பாடிக்கு ஓப்பன் சேலஞ் விட்ட ஓபிஎஸ்..!

நான் செய்வேன்...அவர் செய்வாரா..? எடப்பாடிக்கு ஓப்பன் சேலஞ் விட்ட ஓபிஎஸ்..!
Published on
Updated on
2 min read

ஆதரவாளர்கள் முன்பு பேசிய ஓபிஎஸ், பதவி ஆசை இல்லாத என்னை, பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று கூறுவதாக தெரிவித்து ஈபிஎஸ்க்கு சவால் விடுத்தார்.

கட்சி பூசல்:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதலே உட்கட்சி பூசல் ஆரம்பானது. அன்று தொடங்கிய இந்த பூசல் இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை. ஓபிஎஸை எதிர்த்து ஈபிஎஸ் பொதுக்குழு நடத்தியதும், பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியதும், அந்த வழக்கை எதிர்த்து ஈபிஎஸ் வழக்கு தொடர்வது என  தொடர்ந்து இருவரும் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ்க்கு வெற்றி:

ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் ஆன மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் ஜூன் 23 முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் நீதிமன்றத்தின் தீர்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த ஈபிஎஸ் ஒற்றை தலைமையை ஆதரித்தே பேசினார். 

ஓபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு:

இதனைத்தொடர்ந்து,  ஓபிஎஸ் பக்கம் ஆதரவு பெருகி வருகிறது. ஈபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் பக்கம் சாய்வதாக அவ்வப்போது செய்திகளும் வெளியாகி வருகிறது. அதன்படி, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, மதுரை முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

நிர்வாகிகள் முன்பு பேசிய ஓபிஎஸ்:

இப்படி தனக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசினார். அப்போது பேசிய அவர், ”நான் ஒன்றும் கட்சிக்கு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்; ஆனால் மறைந்த முன்னாள் ஜெயலலிதா தன்னை 2001 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆக்கினார். அதனைத்தொடர்ந்து, எனது விசுவாசம் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு மீண்டும் என்னை முதலமைச்சர் ஆக்கினார். 

நான் பேசினால் யாரும் பேச முடியாது:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் முழுவதும் தொகுதிகளுக்கு சென்று கட்சி வேலைகளை பார்க்க வலியுறுத்தினேன்;ஆனால் கேட்கவில்லை;நான் பேச அவ்வளவு சரக்கு இருக்கிறது. அப்படி பேசினால் யாரும் பேச முடியாது என்றும் கூறினார்.

ஓப்பன் சேலஞ் விட்ட ஓபிஎஸ்:

மேலும், தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசும் போது ஈபிஎஸ்க்கு ஓப்பன் சேலஞ் விட்டார் ஓபிஎஸ். பதவி ஆசை இல்லாத என்னை, பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால், கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்; அதேபோல் எடப்பாடியும் ராஜினாமா செய்யவாரா? அப்படி செய்தால்; இருவரும் கீழே போய் தொண்டர்களை சந்திப்போம். யாரு வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்; மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை பார்ப்போம் என சவாலாக ஓபிஎஸ் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com