ஈபிஎஸ்க்கு வந்த அழைப்பு...ராஜன் செல்லப்பா தந்த பதிலடி...!

ஈபிஎஸ்க்கு வந்த அழைப்பு...ராஜன் செல்லப்பா தந்த பதிலடி...!
Published on
Updated on
2 min read

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு:

அதிமுகவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதிமுக கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்ததை போலவே செயல்படும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழு நடத்த வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனால் மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆனார் ஓ.பன்னீர் செல்வம். இந்த தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு வெற்றி என்றாலும், ஈபிஎஸ்க்கு சற்று சரிவாக தான் கருதப்படுகிறது.

ஈபிஎஸ்க்கு அழைப்பு:

பொதுக்குழு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், எல்லாவற்றையும் மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதோடு, ஈபிஎஸை ’அன்பு சகோதரன்’ என்று கூறி ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.

ஈபிஎஸ் நிராகரிப்பு:

அதிமுகவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் இரு நீதிபதி கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓ.பி.எஸ் அழைப்பை நிராகரிப்பதாக கூறினார். மேலும் அதற்கான பல காரணங்களை காரசாரமாக எடுத்து முன்வைத்தார். 

ஓபிஎஸ்க்கு எந்த தகுதியும் இல்லை:

பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஓ.பி.எஸ் அழைப்பு, ஈபிஎஸ் நிராகரிப்பு என அதிமுக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நேற்று வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தற்காலிகமானதே தவிர, முடியவில்லை. இன்னும் இறுதி தீர்பு வரவில்லை மேல்முறையீடு வழக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சிலர் தற்காலிகமாக வந்த தீர்ப்பினை வைத்து சில அறிக்கைகளை விடுக்கின்றனர் என்று ஓ.பி.எஸை செல்லப்பா சாடினார். அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதற்கு ஓ.பி.எஸ்க்கு எந்த தகுதியும் கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.

திமுகவுடன் கூட்டணி;எப்படி சேர முடியும்?:

செய்தியாளர்கள் சந்திப்பில், அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும், கசப்பை மறக்க வேண்டும் எனவும் ஓ.பி,எஸ் சொல்கிறார். அதே சமயம் திமுகவுக்கும் ஓபிஎஸ் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் நாங்கள் திமுகவை எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி ஒன்று சேர முடியும்? இனி வசந்த காலம் என்றார் ஓ.பி.எஸ்....ஆனால் திமுகவுடன் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்க முடியும்?நாங்கள் அவர்களுடன் ஒன்றுசேர வழியில்லை...என ராஜன் செல்லப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பி.எஸை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com