நிராகரித்த நீதிமன்றம்...விடாமல் மீண்டும் முறையீடு செய்த ஓ.பி.எஸ்..!

நிராகரித்த நீதிமன்றம்...விடாமல் மீண்டும் முறையீடு செய்த ஓ.பி.எஸ்..!

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை மாற்ற வேண்டும்  என தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப் பிய ஓ. பி.எஸ்.- தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து மீண்டும் நீதிபதியை மாற்றவேண்டும் என தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்:

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையில், பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ. பி.எஸ் தொடர்ந்த வழக்கில் கூட்டத்திஅ நடத்தலாம் என்ற நீதிபதியின் தீர்ப்பையடுத்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈ. பி.எஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

தலைமை நீதிபதிக்கு கடிதம்:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப் பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுக்குழு தடைக்கோரிய வழக்கு இன்று விசாரணை:

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ. பி.எஸ் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப் பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

ஓ. பி.எஸ்ஸின் கோரிக்கை:

நீதிபதி முன்பு, வைரமுத்து வைத்த கோரிக்கையை அடுத்து, ஓ. பிஎஸ் தரப் பில் வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது ஏன் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப் பினார். அதற்கு ஓ. பி.எஸ். தரப் பில், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி அதிருப்தி:

தலைமை நீதிபதியிடம் ஓ. பி.எஸ் வைத்த கோரிக்கையை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல்  எனவும் அதிருப்தியை பதிவு செய்தார் நீதிபதி. மேலும், தீர்ப் பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஓ. பி.எஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி:

பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற ஓ. பி.எஸ். தரப் பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் தலைமை நீதிபதியிடம் ஓ. பி.எஸ். தரப்பு  முறையீடு:

இதனிடையே,  மீண்டும்  தலைமை நீதிபதியிடம் ஓ. பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் பிரசாத் முறையீடு செய்துள்ளார். அதில் இன்று பிற்பகலிலும் கூட தன்னுடைய நடவடிக்கைகளை கீழ்தரமான நடவடிக்கை என விமர்சித்துள்ளதால் நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என  ஓ. பி.எஸ். தரப்பு தெரிவித்துள்ளது.

சந்தேகம்:

நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் கடிதங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பி.எஸ்ஸின் இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஏற்று கொள்வாரா? கோரிக்கையை ஏற்று நீதிபதியை மாற்றுவாரா? அல்லது இவர்களின் வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தான் விசாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.