இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம்...அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம்...அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் முதல் நாளே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்பின், கோடை வெப்பத்தின் அனல் காரணமாக ஜூன் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகும் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவர்களின் உடல்நிலையை கவந்த்தில் கொண்டு மீண்டும் இரண்டாவது முறையாக ஜூன் 12 மற்றும் 14 ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டது. 

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணிநேர பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாரும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com