மீண்டும் மற்றொரு உயர்வா..?மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு...ஓபிஎஸ் கடும் கண்டனம்!

மீண்டும் மற்றொரு உயர்வா..?மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு...ஓபிஎஸ் கடும் கண்டனம்!

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து கட்டணம் உயர்வு:

தமிழக அரசு அண்மையில் செத்துவரி, மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் விலை உயர்வு என அனைத்தையும் உயர்த்தி வருகிறது. தற்போது அந்த வரிசையில், போக்குவரத்து சேவைக் கட்டணமும் சேர்ந்துள்ளது. வாகன சீதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து சேவை கட்டணங்களை தமிழக அரசு உயர்த்துவதாகவும், இது குறித்து அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. 

ஓ.பி.எஸ் அறிக்கை:

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது, பல்கலைக்கழக சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வு  என அனைத்தும் சமீபத்தில் உயர்ந்தது. இந்நிலையில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களைப் பல மடங்கு வரை உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு:

கொரோனா பிடியிலிருந்து ஓரளவு விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கையில், ஒருபுறம் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை விஷம் போல் உயர்ந்து கொண்டு வருவதும், மறுபுறம் அரசு தன் பங்கிற்குத் தொடர்ந்து வரிகளை விதித்துக் கொண்டிருப்பதும் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

வாகன சோதனை மையங்களுக்கான கட்டணம்:

வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், தற்காலிக பதிவு மற்றும் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்து அரசு உத்தேசித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/PTR-Tweet-circulating-on-social-media

அறிவிப்பு:

போக்குவரத்து சேவைக்கான கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ள அவர். இது மக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை திணிக்கும் வகையில் அமையும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு கைவிட வலியுறுத்தல்:

ஏற்கனவே, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என பல் இன்னல்களால் துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டுமென்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும்:

போக்குவரத்து சேவை கட்டணம் உயர்வு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழக அரசு ஆலோசனை செய்யுமா? கட்டண உயர்வால் அவதிகுள்ளாகும் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? போக்குவரத்து சேவை கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...