தொண்டர்களிடம் கண்ணீர் வடித்த பிரேமலதா.. விஜயகாந்த் குறித்து வெளிப்படையாக பேச்சு

தொண்டர்களிடம் கண்ணீர் வடித்த பிரேமலதா.. விஜயகாந்த் குறித்து வெளிப்படையாக பேச்சு

விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து பிரேமலதா கட்சி தொண்டர்களிடம் கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு தேமுதிகவினர் அதிர்ச்சியில் ஆடி போயுள்ளனர்.

விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால்.....இந்நேரம் கட்சி எப்படி இருந்திருக்கும் என்று பேசும் அளவிற்கு தான் தேமுதிகவின் நிலைமை உள்ளது....விஜயகாந்த்தின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அரசியலில் இருந்து அவர் ஒதுங்கிவிட்ட நிலையில், கட்சி நடவடிக்கைகளை பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நிலையில் தேறி வந்தாலும் ஆக்டிவாக அரசியலில் இயங்க முடியவில்லை.

 தொடக்கத்தில் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அக்கட்சி வாங்கிய வாக்கு சதவீதம், எம்எல்ஏவாக விஜயகாந்த் சட்டசபையில் நுழைந்தது.இதன் காரணமாக தான்  மெதுவாக அனைவரின் பார்வையும் அக்கட்சியின் மீது விழுந்தன.

 திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணிக்காக வரிசையில் நின்றனர். ஒரு பக்கத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உருவெடுத்து மகா சாதனையை புரிந்தது.

அதன் பிறகு விஜயகாந்த் உடல்நிலை பற்றிய கவலைகள் தொண்டர்களை வாட்டி வதைக்க தொடங்கியது.இப்படிப்பட்ட சூழலில் தான் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 6ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பிரேமலதாவை செயல் தலைவராக்க வேண்டும், விஜய பிரபாகரனிடம் இளைஞரணியை ஒப்படைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தொடக்கத்தில் பல செய்திகள் கசிந்தாலும் பிரேமலதா, விஜயகாந்தின் உடல்நலம் பற்றி பேசிய விஷயங்கள் தான் தொண்டர்களுக்கு சாக்கை ஏற்படுத்தி உள்ளது. 

 அனைவரின் முன்னிலையிலும் கேப்டனின் உடல்நிலை பற்றிய முக்கிய தகவல்களை பிரேமலதா கூட்டத்தின்  முன் கூறி கண்ணீர் வடித்தார் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

அடுத்த அதிர்ச்சியாக விஜயகாந்தின் உடல்நலம் பற்றி பிரேமலதா பேசிய விஷயங்கள் இன்னமும் கட்சியின் அடிமட்ட நிர்வாகி வரை பேசப்படுகிறது. கூட்டத்தில் பிரேமலதா பேசிய சில விஷயங்களில் விஜயகாந்த் உடல்நிலை பற்றிய விவரங்கள் மிக முக்கியமானவை என்கின்றனர் கட்சியினர்.இந்த சம்பவம்  கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது.  

 விஜயகாந்துக்கு கிட்னி மாற்றப்பட்டு உள்ளது. இருதய ஆபரேஷன், மூளைக்கு போன நரம்பு செயலிழப்பு என பல்வேறு விஷயங்களை மனம் திறந்து  பேசியிருக்கிறார்.என்றாவது ஒருநாள் அனைத்தும் சரியாகி குணம் அடைந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்பது போல் பிரேமலதாவின் பேச்சு அமைந்திருந்ததாக தேமுதிகவினர் கூறி உள்ளனர்.

அவரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த நிர்வாகிகள் மட்டுமல்ல, கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை ரீச் ஆகி இருக்கிறதாம்…
கட்சியின் நிரந்தர தலைவராக பிரேமலதா இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கருத்து தெரிவித்து உள்ளதாகவும்,  கட்சியை காப்பாற்ற விஜயகாந்த் இடத்தில் பிரேமலதா என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.தேமுதிக தலைமையில் பெரிய மாற்றம் காத்திருக்கிறது என்று தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்…!! சரி பொறுத்திருந்து பார்ப்போம்!