ராஜ்மோகன்குமார் திமுகவிலிருந்து நிரந்தர நீக்கம்!! காரணம் என்ன?

ராஜ்மோகன்குமார் திமுகவிலிருந்து நிரந்தர நீக்கம்!! காரணம் என்ன?

திருப்பூர் மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளரும் தொழிலதிபருமான ராஜ்மோகன்குமார் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார்.

திமுக தலைமை இன்று முரரொலி நாளிதழில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்மோகன் குமாரை நிரந்தரமாக நீக்கி(dismiss) உத்தரவிட்டிருந்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

நிரந்தர நீக்கம் ஏன்?

திமுக கட்சி விதியின்படி, கட்டுப்பாட்டை மீறி செயல்படும் எந்த ஒரு உறுப்பினரையும் முதன்முறையிலே கட்சியிலிருந்து நீக்க அதிகாரமில்லை. முதலில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு பிரச்சனைகுரிய விளக்கம் கேட்கப்படும், அதில் மன்னிப்பு கேட்டு கடிதமோ அல்லது தன் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும்.

ஒரு முறை தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர் மீண்டும் கட்சியில் சேர்ந்து, மீண்டும் தவறு செய்யும் பட்சத்திலே கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி நிரந்தரமாக நீக்க  முடியும். அந்த வகையில் 2019ல் இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு செல்ல முயற்சித்தபோது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்த விவகாரத்தில் மோகன்குமாரும் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் ஓடக் காடு பகுதியைச் சேர்ந்த கே.ராஜ் மோகன்குமார், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக அலுவலகம், பெட்ரோல் விற்பனை மையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம், வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கட்சி பணியில் சிறிதும் ஈடுபடாமல் வந்த இவர் திரைத்துறையில் கவனம் செலுத்தினார். களவாணி 2 படத்தில் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் இன்று நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரணம் எதும் கூறவில்லை. சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கிய திமுக பேச்சாளர் சிவாஜிராவ் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.