வேலுமணியை காப்பாற்றும் எலிகள்... அழிந்து வரும் ஆதாரங்கள், காணாமல் போகும் கோப்புகள்!! என்னதான் நடக்குது கோவையில்.?

வேலுமணியை காப்பாற்றும் எலிகள்... அழிந்து வரும் ஆதாரங்கள், காணாமல் போகும் கோப்புகள்!! என்னதான் நடக்குது கோவையில்.?

அதிமுக ஆட்சியின் போது அதன் அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்று மிகப் பெரிய பட்டியலை ஆளுநரிடம் கொண்டுபோய் கொடுத்தது திமுக. ஆனால் அதன்மேல் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்துள்ள அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்றவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என சொல்லிக்கொண்டே இருந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது அவர் சொன்னது போலவே திமுகவும் ஆட்சியை பிடித்துவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பணிகளில் தீவிரம் காட்டியதால் ஊழல் அமைச்சர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அப்போதே அமைச்சர்கள் ஊழல் குறித்த தகவல்களை திரட்ட அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் நியமித்ததாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முன்னாள் அமைச்சர்கள் பீதியில் ஆழ்ந்தனர். அதிலும் தென் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் திமுகவின் இந்த நடவடிக்கைக்கு பயந்து பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவலும் வந்தது. மேலும் அமைச்சர்கள் ஊழல் தொடர்பாக ஒரு பட்டியலை திமுக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த பட்டியலில் முதலில் இருப்பது தற்போதை எம். எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி தான் என்கின்றனர் திமுக வட்டாரங்கள். மேலும் அவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டுவரத்தான் மேற்கு மண்டல ஐஜியாக "ஸ்ட்டிரிக்ட்" சுதாகரை நியமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது வலிமையான அதிகாரிகள் தொடர்பால் தனக்கு எதிரான அனைத்து தகவல்களையும் வேலுமணி அழித்து வருகிறார் என்கிறார்கள் தகவல் அறிந்தோர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பல அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். அதற்கு காரணம் அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு தொடர்பில் இருந்த காரணத்தால் தான். ஆனால் கோவையின் பல இடங்களில் தற்போதும் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் பணியில் இருக்கிறார்கள். மேலும் திமுகவில் இருக்கும் பலர் கருப்பு ஆடுகளாக வேலுமணிக்கு வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலுமணிக்கு எதிரான ஆவணங்களை திரட்டுவதில் திமுகவுக்கு பெரும் சவால் ஏற்படுகிறது. 

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கிய கோப்புகள் சில காணாமல் போகிறதாம்.இதுகுறித்து  இந்த கோப்புகள் எங்கே என்று திமுக தலைமைக்கு நெருக்கமான ஆட்கள் யாரும் கேட்டால் எலிகள் திண்றுவிட்டன, கரையான் அரித்துவிட்டது என்று காரணம் சொல்கிறார்களாம் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகள்.