கூட்டணி ஒகே...ஆனால் இதுக்கு வாய்ப்பே இல்லை...டிடிவி அதிரடி...அப்போ ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ்?

கூட்டணி ஒகே...ஆனால் இதுக்கு வாய்ப்பே இல்லை...டிடிவி அதிரடி...அப்போ ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ்?

அதிமுகவில் கூட்டணி வைக்க தயார்...ஆனால் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை....தினகரனின் அதிரடி பதில்..!

அதிமுக ஒற்றை தலைமை பூசல்:

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை பூசல் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த ஜுன் 14 ஆம் தேதிக்கு முன்னர் வரை அதிமுக கட்சியின் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒற்றை தலைமை பிரச்சினைக்கு பிறகு தனி தனியாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி  ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவில் ஜூன் 23 முன்பு இருந்த நிலையே தொடரும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து தான் பொதுக்குழுவை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சசிகலா, தினகரன் இணைந்து செயல்பட வேண்டும்:

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் கூட்டாக இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் எனவும், அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் இதில் இணைந்து செயல்பட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ஓபிஎஸ்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/stalin-and-rahul-gandhi-at-kanniyakumari-public-meet

ஓபிஎஸ் செய்த முன்னெடுப்பு:

செய்தியாளர்களிடம் பேசிய போது டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ், அதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டார். அதிமுகவில் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்கலாம் என்பது குறித்தான பேச்சு நடவடிக்கைகளில் ஓபிஎஸ் இறங்கினார்.

அதிமுவுடன் கூட்டணி வைப்பேன்....ஆனால் இணைய மாட்டேன்:

அதிமுகவில் இணைவதற்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து செயல்பட தயாராக உள்ளேன்; ஆனால் அமமுகவை கலைத்து விட்டு அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டே இதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் கையில் எடுத்தோம். ஆனால், அதற்கு ஈபிஎஸ் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.  

சசிகலா,தினகரன் இணைந்தால் அதிமுக  பலமாக இருக்கும்:

இந்நிலையில்  இன்று சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர், சசிகலா மற்றும் தினகரன் இருவரும் அதிமுகவில் இணைந்தால் அதிமுக பலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஒபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை:

இப்படி ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என அனைவரும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கும் நிலையில், டிடிவி தினகரன் கூட்டணி மட்டும் தான், இணைய வாய்ப்பில்லை என்று கூறுவது, ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன என்பது குறித்தான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  கட்சியை ஒற்றுமையால் கொண்டு செல்லனும் என்ற ஓபிஎஸ்ஸின் வார்த்தை ஜெயிக்குமா? என்பதை பார்ப்போம்....