அதிமுக-வை பிரிக்கவே சசிகலா ஆடியோ வெளியிடுகிறார்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சசிகலா ஆடியோ வெளியிடுகிறார். பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி எங்களை பிரித்து கட்சியை கைப்பற்ற முடியாது. கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக-வை பிரிக்கவே சசிகலா ஆடியோ வெளியிடுகிறார்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சசிகலா ஆடியோ வெளியிடுகிறார். பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி எங்களை பிரித்து கட்சியை கைப்பற்ற முடியாது. கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில்  21-ம் தேதி அனுமதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் சுனிதா 23-ம் தேதி முதல் காணாமல் போனதாக கூறி  8-ம் தேதி பிரதேமாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்வி கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதில் ஒரு பெண் மட்டும் குற்றவாளி என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் மின் தட்டுபாடு நிலவிவருவதாகவும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கிருப்பதாகவும் கூறிய அவர் டெல்லி செல்லும் முதல்வர் நிலுவையில் உள்ள 4,000 கோடி வாட் வரி இழப்பீட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்ற பலகையை ஆங்காங்கே காண முடிகிறது, இல்லை இல்லை என சொல்ல ஒரு அரசாங்கமா? என்ற கேள்வி எழுப்பிய அவர் எங்களுடைய ஆட்சி காலத்தில் கொரோனா உட்சபட்சமாக 7 ஆயிரம் தான் இருந்தது, தற்போது ஏறுமுகத்திற்கு சென்று இறங்கியும் 15 ஆயிரம் தான் உட்சபட்சமாக உள்ளது. 

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசகிலா எப்படி  அதிமுகவுடன் உறவு கொண்டாட முடியும்,  இந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வெற்றிகரமான தோல்வி தான் இதனை பொறுத்துகொள்ள முடியாமல் குழப்பத்மை ஏற்படுத்த சசிகலா ஆடியோ வெளியிடுகிறார். எங்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து பிளவுபடுத்தி கட்சியை கைப்பற்றலாம் என நினைத்தால் அது நடக்காது எனக் கூறினார்.

புகழேந்தி  நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, ஆனால் ஒரு கட்சி சார்ந்து பேசும்போது நாம் எது வேண்டுமானலும் பேசி விட முடியாது. வரம்பு மீறி பேசக்கூடாது, அதனை கட்சி ஏற்று கொள்ளாது என்ற அவர் கட்சியை ஏற்காதவர்கள், கட்சிக்கு விரோதனமாவர்கள் உடன் தொடர்பில் இருந்தார். அதனால் நீக்கப்பட்டார். சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என தீர்மானம் உள்ள நிலையில் அதனை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. துரோகம் செய்ய நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , உடனடியாக உண்மை வெளிவர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமும், எதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என தெரிவித்தார்.