அதிமுகவை சல்லி சல்லியாக சிதைக்க ப்ளான்..! எடப்பாடி கோட்டைக்குள் புகுந்து செந்தில்பாலாஜி அதகளம்..!

எடப்பாடி கோட்டையில் கை வைத்த செந்தில் பாலாஜி..!

அதிமுகவை சல்லி சல்லியாக சிதைக்க ப்ளான்..! எடப்பாடி கோட்டைக்குள் புகுந்து செந்தில்பாலாஜி அதகளம்..!

திமுகவில் இருந்து அதிமுக சென்று பல பதவிகளை பெற்றவர் செந்தில்பாலாஜி. அதிமுக இரண்டாக உடையும் போது டிடிவி.தினகரன் பக்கம் நின்று பேசியவர், பின்பு இங்கிருந்தால் சரிவராது என நினைத்து மீண்டும் தாய் கழகமான திமுவிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். 

மீண்டும் திமுகவிற்கு வந்த அவரை விமரிசையாக வரவேற்ற திமுக அவருக்கு பொறுப்புகளை கொடுத்தது. கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி கிடைத்தது.

இருப்பினும் திமுகவிற்கு தனது பலத்தை காட்ட வேண்டும் என எண்ணிய அவர், தனது சீக்ரட் ஆப்ரேஷனை தொடங்கினார். அமமுக தற்போது சின்னாபின்னாமாகி வரும் நிலையில், டிடிவி.தினகரனும் நிர்வாகிகளுக்கு எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. அவ்வப்போது சசிகலா மட்டும் தொண்டர்களிடம் பேசி வருகிறார். இத்தகைய சூழலில் அமமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களையும், தனது பால்ய சினேகிதர்களையும் திமுக பக்கம் இழுத்து வருகிறார் செந்தில்பாலாஜி. 

அமமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான  பழனியப்பன் போன்ற பெரிய கைகளை பேசி, கவிழ்த்த செந்தில்பாலாஜி அதிமுகவினரையும் குறிவைத்துள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக சேலம் மாவட்ட பொறுப்பாளராக தமிழக அரசு நியமித்தது. 

இது ஒரு அரசியல் நோக்கத்துடன் இருக்கலாம் என பலரும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சந்தேகம் உண்மையாகி இருக்கிறது. நேற்று அதிமுக தலைமையானது கட்சியிலிருந்து சேலம் புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளரான செல்லத்துரை மற்றும் தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கியதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே சசிகலாவிடம் பேசி வரும் அதிமுகவினரை அக்கட்சி தலைமை விலக்குவது நடப்பது தானே இதிலென்ன உள்ளது என நினைத்தால்..!

அங்கு தான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. செல்லத்துரை சசிகலாவிடம் பேசியது இல்லை. மேலும் அவர் எடப்பாடி பழனிசாமியின் ரைட், லெஃப்ட்டாக செயல்பட்டவர். நடந்து முடிந்த தேர்தலின் போது கூட எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளராக பணியாற்றி, பழனிசாமியை வெற்றி பெற வைக்க பல வியூகங்களை வகுத்தவர். ஒரு வகையில் அவரது உறவினரும் கூட. சேலத்தில் ஒரு பெத்த கையாக இருந்த செல்லத்துரையை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியது ஏன்? என அதிமுகவினர் கொத்தளித்த நிலையில், 

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சேலம் சென்ற செந்தில்பாலாஜி அதிமுகவினரை நோக்கி வலையை விரித்துள்ளார். அதில் விழுந்த முதல் விக்கெட் செல்லத்துரை என தெரியவந்தது. இதனை கேட்டு நொந்து வெந்து போன எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த செய்திக் கேட்டு செல்லதுரையை தொடர்பு கொள்ள எடப்பாடி பழனிசாமி முயன்றும் பதில் இல்லாததால், அவர் திமுகவில் இணையும் முன்னரே அவரை கட்சியிலிருந்து தூக்கி விட்டனர். 

ஏற்கனவே கட்சி பதவி, சசிகலாவின் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வந்த அதிமுகவுக்கு தற்போது செந்தில்பாலாஜி மூலமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அடுத்தடுத்து செந்தில்பாலாஜி வலையில் விழப்போகும் புள்ளிகள் யார் யார்? என்ற சந்தேகத்தில் உரைந்து போயுள்ளது அதிமுக தலைமை..